Politics

அதிமுகவினரை காட்டிலும் எடப்பாடிக்கு அதிக முட்டு கொடுக்கும் பாஜகவினர் காரணம் என்ன?

அதிமுகவினரை காட்டிலும் எடப்பாடிக்கு அதிக முட்டு கொடுக்கும் பாஜகவினர் காரணம் என்ன?
அதிமுகவினரை காட்டிலும் எடப்பாடிக்கு அதிக முட்டு கொடுக்கும் பாஜகவினர் காரணம் என்ன?

தமிழக சட்டசபை தேர்தர் முடிவுகள் வெளியாகி ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்று கொண்டது, எதிர்க்கட்சி வரிசையில் அமரவேண்டிய அதிமுக எதிர் கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் முதல் MLA-கள் கூட்டத்தை நடத்தி முடிவுகள் எட்டபடாத காரணத்தால் திங்கள் கிழமை மீண்டும் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் சமூக வலைத்தளங்களில்  எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே விவாதங்கள் அரங்கேறி வருகின்றன, இதில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மோடி, பாஜக புகைப்படங்களை வைத்துள்ள நபர்கள் அதிக அளவிலும், பாமகவை சேர்ந்தவர்கள் அதிக அளவிலும் ஆதரவு தெரிவித்து வருவது ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது.

பாஜகவில் வளரும் முகமாக அறியப்பட்ட அண்ணாமலை கிணத்துகடவு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டும், அண்ணாமலை வெற்றி பெற்றால் கொங்கு மண்டலத்தின் முகமாக அண்ணாமலை மாற வாய்ப்பு இருக்கிறது, எனவே அவரை வெற்றி பெற வைக்க கூடாது என ஒரு சேர முடிவு எடுத்து அரவக்குறிச்சி தொகுதியை ஒதுக்கியவர்களில் முக்கியமானவர் பழனிசாமிஅப்படி இருக்கையில் பாஜகவினர் எவ்வாறு ஆதரவு கொடுக்கிறார்கள் என்பது முதல் கேள்வி.

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளித்து பாஜக நடத்திய வேல் யாத்திரை நிகழ்விற்கு அனுமதி மறுத்தவர் எடப்பாடி பழனிசாமி, வேல் யாத்திரை மூலம் இந்துக்கள் வாக்கு வங்கி உருவானால், பாஜக அதிக சீட் ஒதுக்க கோரும் என அறிந்து தடுத்தவர் பழனிசாமி அப்படி இருக்கையில் பாஜகவினர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இவை அனைத்தும் நீங்கலாக சட்டமன்ற பொது தேர்தலில் கொங்கு மண்டலம் வட மண்டலம் என பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ள அதிமுக, ஒன்றைரை ஆண்டிற்கு முன்பு நடந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் ஏன் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை, முதல்வரின் சொந்த தொகுதியில் கூட தோல்வியை தழுவியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

குறிப்பாக கோவையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள வேலுமணி, பாஜக தோல்வியை தழுவ திட்டமிட்டு, டாக்டர் மகேந்திரனை கமல் கட்சியில் இணைத்து பாஜகவிற்கு செல்ல கூடிய ஒரு லட்சம் வாக்குகளை பிரித்து பாஜக வேட்பாளராக போட்டியிட்ட சிபி ராதாகிருஷ்ணனை தோல்வியடைய செய்ததாக கூறப்படுகிறது.

கோவையில் அதிமுக எளிதில் வெற்றி பெற்ற நிலையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் தனியாக போட்டியிட்டு 33 ஆயிரம் வாக்குகளை பெற்றார், இப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்த நிலையில் தனது சொந்த செல்வாக்கிலே வெற்றி பெற்றுள்ளார் வானதி.  வானதி, கமல், மயூரா ஜெயக்குமார் என மும்முனை போட்டி உருவாக்கவில்லை என்றால் முடிவுகள் வேறு மாதிரி மாறவும் வாய்ப்புகள் இருந்து இருக்கும் என்பதே கோவை தெற்கின் கள நிலவரம்.

பாஜக மூத்த தலைவர் H ராஜா போட்டியிட்ட காரைக்குடி தொகுதியில் அமமுக பிரித்த வாக்குகள் சதவிகிதம் படி பார்த்தால், அதிமுக வாக்குகள் பாஜகவிற்கு வருவதை காட்டிலும் அமமுகவிற்கு செல்வதை குறிப்பிட்டுள்ளது, அந்த வகையில் பாஜகவிற்கு காரைக்குடி தொகுதியில் ஏற்பட்ட தோல்விக்கு அதிமுக வாக்குகள் முழுமையாக பாஜக வேட்பாளருக்கு செல்லாததே காரணம் என கூறப்படுகிறது.

கள நிலவரம் இப்படி இருக்க கொங்கு மண்டலம் மற்றும் வேறு சில பகுதிகளை சேர்ந்த பாஜக ஆதரவாளர்கள் எடப்பாடியார் என பழனிசாமி பின்னால் செல்வது, சாதிய பாசமா அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட பாசமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன இந்நிலையில் பாஜகவில் அதிகரித்து வரும் சாதி தலைவர்கள் தொண்டர்களை விமர்சனம் செய்யும் விதமாக பதிவு ஒன்றுபகிரப்பட்டு வருகிறது

அதில் பாஜக வில் முக்குலத்தோருக்கு முன்னுரிமை வேண்டும்

என்கின்றவன் பார்வர்ட் பிளாக் கட்சியில் சேர்ந்து கொள்.

யாதவர்களுக்கு முன்னுரிமை இல்லை என்கின்றவன்

தேவநாதன் யாதவ் பின்னாடி ஓடி போ.

வன்னியருக்கு முன்னுரிமை வேண்டும் என்கின்றவன் பாமகவில்

சேர்ந்து விடு.

நாடாருக்கு முன்னுரிமை வேண்டும் என்கின்றவன் ஹரி நாடார்

பின்னாடி ஓடி போ..

கவுண்டருக்கு முன்னுரிமை வேண்டும் என்கின்றவன் கொங்கு

ஈஸ்வரன் பின்னாடி ஓடி போ..

அதை விட்டுட்டு பாஜகவில் இருந்துகொண்டு உன் சாதி அரிப்பு

தாங்க முடியாமல் இங்கே சொறிய வேண்டாம் இது ஜாதிக்கு

அப்பாற்பட்ட அனைவருக்குமான கட்சி என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜகவிற்கு என்று தனியான வழி இருப்பினும் தற்போது திராவிடம் வகுத்து கொடுத்த பாதையை நோக்கி, பாஜக ஆதரவாளர்களே சென்று இருப்பது கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.