Politics

அமைச்சர் ஜெயக்குமாரின் வெற்றியை உறுதிப்படுத்திய திமுக வேட்பாளர்!!! என்ன இப்படி ஆகிப்போச்சு!!!

அமைச்சர் ஜெயக்குமாரின் வெற்றியை உறுதிப்படுத்திய திமுக வேட்பாளர்!!! என்ன இப்படி ஆகிப்போச்சு!!!
அமைச்சர் ஜெயக்குமாரின் வெற்றியை உறுதிப்படுத்திய திமுக வேட்பாளர்!!! என்ன இப்படி ஆகிப்போச்சு!!!

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுவதால், ராயபுரம் தொகுதி நட்சத்திர தொகுதிகளில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது, திமுக சார்பில் மூர்த்தி என்ற புது முகத்தை ராயபுரம் தொகுதியில் நிறுத்தியுள்ளது திமுக.


தொகுதியில் அறிமுகம் இல்லாத நபர் என்று பார்த்தால், கட்சியினரிடம் கூட அறிமுகம் இல்லாத நபராகத்தான் திமுக வேட்பாளர் இருக்கிறார், வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்புவரை மூர்த்தி திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட இல்லாதவர் என்று கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க திமுக வேட்பாளர் மூர்த்தி அமைச்சர் ஜெயக்குமாரின் ஆளுமையை பாராட்டிய சம்பவம் வெளிவந்துள்ளது,  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராயபுரத்தில் ஓசன் மாறத்தன் எனும் போட்டி நடைபெற்றது, இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் விருதுகளையும் பதக்கங்களையும் வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில் தற்போது ராயபுரத்தில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக  போட்டியிடும் ஐடிரீம்  மூர்த்தியும் பங்கேற்று  மீன்வளத்துறை அமைச்சரை பாராட்டி பேசியுள்ளார், இதில் சுவாரஷ்யமான விஷயம் என்னவென்றால் திமுக வேட்பாளர் மூர்த்தி,அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் மக்களுக்கு செய்த நன்மைகளையும், அமைச்சரின் ஆளுமை குறித்தும் புகழ்ந்து பேசியுள்ளார், குறிப்பாக தொகுதியில் அமைச்சர் மரம் நடும் பணிகளை பாராட்டி பேசியுள்ளார்,திமுகவின் வேட்பாளரே அதிமுகவை சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமாரின் தொகுதி பணிகளை பாராட்டிய சம்பவம் ராயபுரம் தொகுதி மக்களிடையே அமைச்சர் ஜெயக்குமார் மீதான தங்கள் தொடர் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

பணம் இருப்பவர் என்ற ஒரே காரணத்திற்காக இவருக்கு திமுக வாய்ப்பு அளித்து இருக்கிறது என்று கூறப்படும் நிலையில், காலம் காலமாக திமுகவில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருக்கும் ராயபுரம் தொகுதி நிர்வாகிகள் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பணிகளை முறையாக செய்யவில்லை என்ற நிலை உண்டாகியுள்ளது.

திமுக வேட்பாளர் 24 மனை செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர், இவர் வள்ளல் அழகர்சாமி S.I செட்டியார் மேனிலை பள்ளியில் தாளாளராக  ஒருகாலத்தில் இருந்தார், அமைச்சர் ஜெயக்குமார் தான் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே இந்த பள்ளிக்கு உதவிகளை செய்து வருகிறார். பள்ளியை மேல் நிலை பள்ளியாக தரம் உயர்த்தியது, பள்ளியில் பயிலும் மாணவர்கள் அங்கேயே பொது தேர்வு எழுத எக்ஸாம் சென்டர் அமைத்தது.

பள்ளியின் வளர்ச்சிக்கு உதவியது, விளையாட்டு திறனை மேம்படுத்த ஒரு லட்சம் ரூபாய் சொந்த பணத்தில் இருந்து டெபாசிட் செய்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார் இந்த பணிகளை முன்னின்று அமைச்சர் செய்திருக்க, திமுக வேட்பாளரோ நான் தான் பள்ளியின் வளர்ச்சிக்கு இந்த பணிகளை செய்தேன் என பொய் தகவலை பரப்பியிருக்கிறார், இதன் வெளிப்பாடாகதான் பள்ளியின் தாளாளர் பதவியில் இருந்து மூர்த்தியை நிர்வாகிகள் நீக்கியுள்ளனர்.

திமுக 50-வது வட்ட அவைத்தலைவராக இருப்பவர் ராஜி அவரது மகனின் வீட்டையே, திமுக வேட்பாளர் மூர்த்தி அபகரித்து கொண்டுதாகவும்,  அவரது மகன் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

பணத்தால் மக்களை மாற்றிவிடலாம் என கணக்கு போட்டு திமுக மூர்த்தியை வேட்பாளராக நிறுத்தியது  ஆனால் திமுக வேட்பாளரே அமைச்சரை புகழ்ந்து பேசி இருப்பது, சொந்த சமுதாய மக்களே பள்ளியின் தாளாளர் பதவியில் இருந்து அவரை நீக்கியதும், குறிப்பாக நில அபகரிப்பு புகாரில் ஒருவரின் வீட்டினை இடித்து கார் பார்க்கிங் கட்டியவர் மூர்த்தி என்ற வழக்கு, ராயபுரம் தொகுதியில் முன்பை காட்டிலும் திமுக வாக்கு வங்கியை சிதைத்துள்ளது.

24 மனை செட்டியார் சமுதாயத்தை பொறுத்தவரை பெரும்பாலும் வியாபாரம் ரீதியான தொழில் செய்பவர்கள், இவர்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் தனது சட்டமன்ற உறுப்பினர் காலத்தில் வியாபாரத்திற்கு முறையான பாதுகாப்பு வழங்கி வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய உதவியதாகவும், 24 மனை செட்டியார் சமூகத்தை சேர்ந்த 160 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாநகராட்சி இடத்தை வியாபார தளத்திற்கு ஒதுக்கி வழங்கியதாகவும் எங்கள் ஓட்டு ஜெயக்குமாருக்கு தான் என கூறுகிறார், அமைச்சரால் பயன்பெற்ற 24 மனை செட்டியார் சமூகத்தை சேர்ந்த பயனாளி ஒருவர்.

அதிமுக வேட்பாளராக களத்தில் இருக்கும் அமைச்சர் ஜெயக்குமார் முன்பை காட்டிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ராயபுரம் தொகுதியில் 6 வது முறையாக வெற்றி பெறுவார் என்பதை திமுகவின் வேட்பாளரே உறுதி படுத்தியுள்ளார்.