தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவர் மிகவும் ஆபாசமான முறையில் பேசினார். இது பாஜகவினர் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்தது.
தொடர்ச்சியாக ஆளும் கட்சியை சேர்ந்த திமுகவினர் பாஜகவினர் மீது நாகரிகமான முறையில் விமர்சனம் வைக்காமல், அநாகரீகமான முறையில் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதாக கண்டனங்கள் எழுந்தது, இதற்கு முன்னர் பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் மீது சமூக வலைதளத்தில் திமுகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் ஆபாசமான முறையில் புகைப்படத்தை சித்தரித்து பதிவிட்டார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார் காயத்ரி ரகுராம், அந்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சாட்சியங்கள் இருந்தும் ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் குற்றம் சுமத்திய காயத்ரி ரகுராம், டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இதனால் காயத்ரி ரகுராம் குறித்து தவறாக பேசிய அந்த நபர் மீது விரைவில் தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டு தமிழக அரசிற்கு நோட்டீஸ் அனுப்பலாம் என்று கூறப்படுகிறது, இப்படி ஒரு சம்பவம் நடைபெற்று சிறிது நாட்கள் கூட தாண்டாத நிலையில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவர் மிகவும் ஆபாசமான முறையில் பேசினார் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது, இது பாஜகவினரை கொந்தளிக்க செய்தது, சட்டபடி காவல்நிலையத்தில் புகார் அளித்தது ஒரு தரப்பு..,
ஆனால் இதுவரை காவல்நிலையத்தில் ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் மீது புகார் அளித்தால் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் மற்றொரு குழு திராவிட அரசியல் பாணியில் தவறாக பேசிய நபரை முறையாக கவனிக்க முடிவு செய்துள்ளனர், அத்துடன் தவறாக பேசிய நபரை தொடர்பு கொண்டும் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்துள்ளனர்.
இதனால் அலறி அடித்து கொண்டு காவல் நிலையம் ஓடியுள்ளார் அண்ணாமலை குறித்து தவறாக விமர்சனம் செய்து வீர வசனம் பேசிய நபர் அய்யா தெரியாமல் பேசிவிட்டேன் இனி பிரதமர் மோடி குறித்தோ, அண்ணாமலை குறித்தோ ஏன் யார் குறித்தும் பேசமாட்டேன் என்னை விட்டுவிட சொல்லுங்கள் என கண்ணீர் விட்டே கதறி இருக்கிறார்.
இதையடுத்து அதே சமூக வலைத்தளத்தில் இனி தவறாக பேசமாட்டேன் என வீடியோ வெளியிட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என அறிவுறுத்த அதையே பின்பற்றி மன்னிப்பு கேட்டுள்ளார் மீசை மிராசு திமுக பிரமுகர். மிரட்டல் விடுத்தது பின்பு மன்னிப்பு கேட்ட வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும் .
More news from - tnnews24 youtube