ஜெய்பீம் திரைப்படத்தை மத்திய அரசு தடை செய்யவேண்டும் எனவும், ஜெய்பீம் திரைப்படத்தை எடுத்த இயக்குனர் நடிகர்கள் பிரகாஷ் ராஜ் ஆகியோரை வன் கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அதிர்டி காட்டியுள்ளார்.
ஜெய்பீம் திரைப்படம் கடும் அதிர்வலைகளை சினிமா துறையில் உண்டாக்குவதற்கு பதில், கடும் சர்ச்சைகள் போராட்டம் ஆர்ப்பாட்டம் என அரசியல் மற்றும் பொது வாழ்வில் உண்டாக்கியுள்ளது, வன்னியர்களை தவறாக காட்சிபடுத்தியதாக வன்னியர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அத்துடன் பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் சூர்யாவிற்கு கேள்வி எழுப்ப அதனை சூர்யா புரிதல் பத்தவில்லை என அறிக்கை கொடுக்க விவகாரம் மோதல் போக்கை உண்டாக்கும் வகையில் சென்றுகொண்டு இருக்கிறது, இந்த சூழலில் சூர்யா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, அம்பேத்கரின் புனிதவார்த்தையான ஜெய் பீம் வாக்கியத்தை வணிக நோக்கில் பயன்படுத்தியது முதல் தவறு, இரண்டாவது சாதி குறித்து அடையாளம் வைத்தது, மூன்றாவது மதம் குறித்து அடையாளம் கொண்டுவந்தது அடுத்தது, இன ரீதியான மோதலை உண்டாக்க பார்த்தது.
பிரகாஷ் ராஜ் ஏன் தமிழ் தெரியவில்லை என்றால் தமிழில் பேசு என சொல்லும் வகையில் காட்சி அமைத்து இருக்கலாம் ஆனால் ஏன் அடிக்கும் வகையில் காட்சி அமைக்க வேண்டும் இதுவே வன் கொடுமை, இயக்குனர் மற்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோரை சிறையில் உள்ளே தூக்கி போடவேண்டும் எனவும் ஆணி தரமாக தெரிவித்தார் கிருஷ்ணசாமி.
மேலும் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் தனது பாணியில் பதிலடி கொடுத்தார் கிருஷ்ணசாமி, தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது, மொத்தத்தில் ஜெய்பீம் திரைப்படம் சூர்யாவின் திரைபயணத்தில் மைல் கல்லாக இருக்கும் என எதிர்பார்த்தால், தலையில் விழுந்த பாறையாக மாறிவிட்டது. வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL, YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.