Cinema

ஸ்டாலின் "வந்தா" 11 தேங்காய் உடைக்கிறதா வேண்டி இருந்தேன் ஆனா தமிழ் படம் "சிவா" பாணியில் பாட்டி கொடுத்த பேட்டி !

siva tamilpadam
siva tamilpadam

பெரும் மழையால் சென்னை நகரமே ஸ்தம்பித்து வரும் நிலையில் தற்போது திமுகவிற்கு வாக்களித்த பொதுமக்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர் அந்த வகையில் மூதாட்டி ஒருவர் கொடுத்த விசித்திர பேட்டி வைரலாகி வருகிறது.


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவருகிறது. கடந்த சில தினங்களாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்துவருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதற்கிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையில் சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேடை மாவட்டங்களில் இன்று (10.11.2021) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சேலம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது

ஏற்கனவே தேங்கியுள்ள மழை நீர் அகற்றப்படாத நிலையில் தற்போது அடுத்த மழை பெய்தால் சென்னை வாசிகள் நிலை என்ன ஆகும் என்ற அச்சம் எழுந்துள்ளது, இந்த சூழலில் மூதாட்டி ஒருவர் நான் ஸ்டாலின் முதல்வராக வர வேண்டும் என பிள்ளையாருக்கு வேண்டுதல் வைத்தேன் அப்படி ஸ்டாலின் முதல்வராக வந்தால் 11 தேங்காய் உடைப்பேன் எனவும் வேண்டியிருந்தேன்.

நா நினச்ச மாதிரி அவரு வந்துட்டாரு, அவரு வந்தா நல்லதுதான், ஆனா இதுவரைக்கும் எனக்கு எதுவும் பண்ணல, என்ன பாக்கவும் இல்லை, ஸ்டாலினுக்கு ஓட்டு கேட்டது நான்தான் ஸ்டாலின் வந்தால் நம்மளுக்கு நல்லது செய்வாரு என கேட்டேன் செய்வாருன்னு நம்பிக்கையாவும் இருந்தேன் ஆனால் அவர பாக்கவே இல்லை என பேசியுள்ளார்.

அதாவது ஸ்டாலினை குறையும் சொல்ல முடியவில்லை அதே நேரத்தில் பாதிப்பை நினைத்து வேதனையை அடக்க முடியவில்லை மூதாட்டி பேச்சை கிண்டல் செய்து நெட்டிசன்கள் மீம் போட்டு வருகின்றனர், அதில் ஒரு நெட்டிசன் சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் ஒன்றில் ஒரு சூறாவளி கிளம்பியதே  என்ற பாடலில் சிவா பிணவரை ஒன்றை திறந்து வைப்பார் அதில் ஒப்பாரி வைத்து வேதனையில் வரும் குடும்பத்தினருடன் போட்டோ எடுத்துக்கொள்வார்.

அதில் பாதிக்கப்பட்டவர்கள் நிலை என்னவோ அதே நிலை தான் பாட்டி நிலை, மெல்லவும் முடியவில்லை, துப்பவும் முடியவில்லை என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். பாட்டி கொடுத்த பேட்டி கீழே இணைக்கப்பட்டுள்ளது.