Cinema

பளார் பளார் என வெளுத்துவிட்ட கஸ்தூரி.. வெட்கி தலைக்குணிந்த திராவிட ஆதரவாளர்

Actress kasthuri
Actress kasthuri

தன்னை நோக்கி திராவிட கட்சியான திமுக ஆதரவாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பளார் பளார் என பதிலடி கொடுத்து வெளுத்து வாங்கி வருகிறார் நடிகையும் வழக்கறிஞருமான கஸ்தூரி. ஜெய்ஹிந்த் என உரக்க சொல்லுவோம் என கஸ்தூரி தெரிவித்த கருத்திற்கு கீழே  குஜராத் சென்றால் நீங்கள் இன்னும் சத்தமாக சொல்லலாமே என விதண்டாவாதம் செய்தார்.


அந்த நபருக்கு பளார் பளார் என அடுத்த நொடியே பதிலடி கொடுத்தார் நீங்களும் பிலிப்பன்ஸ், வெனிசுலா சென்றால் ஜெய்ஹிந்த் சொல்ல தேவையில்லை, ஸ்தோத்திரம் மட்டும் சொன்னால் போதும் என பதிலடி கொடுத்தார் இந்நிலையில் ஜெய்ஹிந்த் வார்த்தையை கொச்சை படுத்துபவர்களுக்கு மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார் கஸ்தூரி.உயிர் தியாகம் செய்தவர்களின் வீர முழக்கம் ஜெய் ஹிந்த். உடன்பிறப்புக்களின்  விதண்டாவாதம் அல்ல. இதில் மொழி/கட்சி பேதம் பார்ப்பவர்கள் இந்தியர்கள்தானா?

சரி உங்க வழிக்கே வர்றேன். நாட்டு பிரச்சினையெல்லாம் தீர்ந்து  பாலும் தேனும் ஓடுமா சொல்லுங்க? ஒன்றியம் என்ன,  ஆயிரத்து ஒன்றியம்னு கூட கூப்பிட நான் தயார் !  அதிமுக அரசில் ஊர் பெயரையெல்லாம் spelling மாற்றி வைத்தார்கள். அது போலத்தான் இதுவும். எல்லாமே வேண்டாத ஆணி. உண்மையான பிரச்சினையிலிருந்து மடைமாற்றி மக்களை மடையராகும் தந்திரமே இந்த வேண்டாத பெயர் மாற்றங்கள்.  

இல்லேன்னா வாயார தமிழகம் , மத்திய அரசு என்று நமக்கு சொல்லி குடுத்த கலைஞரையும் அண்ணாவையும் திருத்த வேண்டிய அவசரம், அவசியம் இப்போ என்ன ?கலைஞருக்கு தெரியாத வரலாறா, அரசியல் சாசனமா?  தனித்தமிழ்நாடு முழக்கமெல்லாம் திரும்பி பெற்ற வரலாற்றை இன்றைய திமுகவினர் அறிந்தே இருப்பார்கள்.

பெரியாரிய திராவிட இயக்கங்களின் மூலத்தை அறிந்தவர்களுக்கு இந்த ஆங்கில அன்னியோன்னியம் பெரிய ஆச்சரியத்தை தராது. ஆனால்  வெள்ளையன்  ஆட்சிக்கு எதிராக போராடிய காங்கிரஸ்  கட்சி  இன்று வேற்று  தலைமையை ஏற்று தலைகுனிந்து நிற்பதும் , காங்கிரெஸ்ஸை ஒழிக்க , காந்தியின் ஆளுமையை குறைக்க ஆங்கிலேயரால் வளர்க்கப்பட்ட திராவிட இயக்கத்தின் காலுக்கடியில் விழுந்து கிடப்பதும் தான் உண்மையான ஆச்சரியம் !ஹிந்த் என்றால் ஹிந்தியாம், இந்து வாம்  !

நமது சுயமரியாதை பகுத்தறிவுச்செல்வங்கள்  அதை சொல்ல மாட்டார்களாம்! தமிழ் பெயர்ச்சொல்லான பாரதம் என்றும் சொல்ல மாட்டார்களாம். ஆங்கில சொல் இந்தியா என்பது மட்டும் தான் செல்லுமாம் ! "இந்தியா' என்பதில் இந்து என்ற தொனி  இல்லையா என்ன ? ஹைய்யோ ஹைய்யோ.அரைவேக்காட்டு புரிதல்களுக்கு விளக்கம் குடுப்பது நம் கடமையும் ஆகிறது.

 'ஹிந்த்' என்ற சொல்லின் வரலாறு  :பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே  பாரசீகர்கள்  'சிந்து' நதி ஓடும் நாட்டை குறிக்க பயன்படுத்திய பெயர் "ஹிந்து'. அந்த காலத்தில் இந்தியாவின் பல பிரதேசங்களுக்கு  ஜம்புதீபம், பாரதவர்ஷம்  போன்ற பெயர்களும் வழக்கில் இருந்தன.  சப்தசிந்து  நதிகள் சங்கமிக்கும் நமது பாரததிருநாட்டை  கப்பல்வழி வணிகத்தில் ஈடுபட்டிருந்த பாரசீகர்களும் அரேபியர்களும் துருக்கியர்களும் 'ஹிந்த்' என்று அழைத்தார்கள். அவர்கள் மூலம் 'ஹிந்த்' என்ற நாட்டை பற்றி முதன்முதலில் மேல்நாட்டிற்கு  தெரிந்தது.

பண்டைய ரோமானிய வரலாற்று ஏடுகளில் 'இண்டஸ்', 'இந்து' என்ற பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.  பின்னர் அலை அலையாக வந்து நம்மை ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் மொத்த இந்தியாவையும் தங்கள் சாம்ராஜ்ஜியத்தின் கீழ் கொண்டுவந்தார்கள். இன்றைய ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், பர்மா, வங்கம், காஷ்மீரம், தென்னிந்தியா  அனைத்தையும் உள்ளடக்கிய மிகபெரிய நாட்டை ஹிந்துஸ்தான் என்று அழைத்தார்கள். இந்து மதம், இந்தி மொழி எல்லாம்  இந்திய நாட்டின் பெயரால் வந்தவையே  அன்றி  இந்திய நாட்டின் பெயர் எந்த மொழியிலிருந்தோ மதத்திலிருந்தோ வந்தது அல்ல.

ஜெய் ஹிந்த் என்ற சொற்றோடொரின் வரலாறு : தமிழர் ஷெண்பகராமனால் உருவாக்கப்பட்டு, ஹைதெராபாத் இஸ்லாமியர் ஜைனுலாபிதீன் ஆல் பரிந்துரைக்கப்பட்டு நேதாஜி சுபாஷ் சந்திரா போஸ் ஆல்  நம் சுதந்திரப்போரின் வெற்றிமுழக்கமாக மாறியது ஜெய் ஹிந்த் !   இந்திரா காந்தி அம்மையார் எந்த உரையையும்  மூன்று முறை ஜெய் ஹிந்த் என்றே முடிப்பார். இன்று நம்மை காக்கும் பட்டாளத்திலும் வணக்கத்துக்கு பதில் ஜெய் ஹிந்த் என்ற எழுச்சிமிகு முழக்கம் வழக்கத்தில் உள்ளது.

ஜெய் ஹிந்த்  என்று பெருமையாக சொல்ல  இந்தியர் ஒவ்வொருவரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் !  தமிழில் வெல்க பாரதம் என்று சொல்லலாம் !  வெல்க இந்தியா எனலாம். அந்த மந்திர சொற்களை பிரிவினைவாத பாவாத்மாக்கள்  உச்சரிக்காமல் இருப்பதே நலம்! இதில் மொழி மத அரசியலுக்கோ கட்சி கூப்பாடுகளுக்கோ இடமேயில்லை  என பட்டாசு போல் வெடித்துள்ளார்.

கஸ்தூரியின் பல கேள்விகளுக்கு பதில் கூறமுடியாமல் ஜெய்ஹிந்த் குறித்து கேள்வி எழுப்பிய திராவிட ஆதரவாளர்கள் வெட்கி தலைகுனிந்து வருகின்றனர்.