Tamilnadu

அமைச்சர் பதவியில் இருந்து தியாகராஜன் வெளியேற்றமா ? வளைகாப்பு உளறல் காரணமா ?

MK stalin
MK stalin

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விரைவில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக அறிவாலய வட்டாரத்தில் பேசுபொருளாக உள்ளன, வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் நிதி துறையில் நல்ல அனுபவம் கொண்டவறாக இருப்பார் என எதிர்பார்த்த ஸ்டாலின் மிகவும் முக்கிய துறைகளில் ஒன்றான நிதி அமைச்சர் பதவியை கொடுத்தார்.


ஆனால் அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு கடும் சர்ச்சையில் சிக்கி வருகிறார் தியாகராஜன், எடுத்த எடுப்பில் ஆன்மீகவாதி ஜக்கி வாசுதேவ் உடன் மோதல் போக்கை தொடங்க, ஜக்கி வாசுதேவ் பதிலடி கொடுக்க இருவருக்கும் இடையே நீர் பூத்த நெருப்பாக வாக்குவாதங்கள் நீண்டு வந்தன, இந்நிலையில் இனி ஜக்கி வாசுதேவ் குறித்து குறிப்பிட்ட காலம் பேசப்போவது இல்லை என விளக்கம் கொடுத்து சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்தார் தியாகராஜன்.

அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பையும் தவிர்த்து வந்தார், இந்த சூழலில் தான் விவசாயிகள் சிலர் மின்சாரத்தை திருடுவதாக கூறி சர்ச்சையில் சிக்கினார் அதன் பிறகு அரசு ஊழியர்கள் அகவிலைப்படி குறித்து பேசி கடும் எதிர்ப்பை கட்சிக்குள்ளும் சந்தித்தார், இது ஒருபுறம் இருக்க நாட்டின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் GST கூட்டத்திற்கு ஏன் செல்லவில்லை என செய்தியாளர்கள் கேட்க அதற்கு அவர் அளித்த தகவல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

GST கூட்டம் பற்றிய தகவல் தாமதமாக வந்ததாகவும், அதற்குள் வளைகாப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு செல்ல ஒப்புதல் கொடுத்துவிட்டதாக தெரிவித்தார், நாட்டின் நிதி ஆளுமையை நிர்வகிகின்ற   GST கூட்டத்திற்கு செல்வது ஒரு நிதி அமைச்சரின் கடமையா? அல்லது வளைகாப்பிற்கு செல்வது முக்கியமா? என பலரும் கேள்வி எழுப்ப அறிவாலயம் வட்டாரம் அதிர்ந்து போயுள்ளது.

தொடந்து தியாகராஜன் மூலம் நாளுக்கு ஒரு பிரச்சனை வருவதால் அவரை கட்சி பணிக்கே திருப்பி அனுப்ப திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது, இருப்பினும் தியாகராஜன் உறவினர் சபரீசன் ஸ்டாலினின் மருமகன் என்பதால் அந்த லாபி மூலம் அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிக்க தியாகராஜன் முயலுவதாகவும் கூறப்படுகிறது.

செய்தியாளர் சந்திப்பில் வாயை அடக்குங்கள் அல்லது தவிருங்கள் இல்லை என்றால் அமைச்சர் பதவி காலியாகும் என்ற அழுத்தம் திருத்தமான தகவல் நிதி அமைச்சர் தியாகராஜனுக்கு கொடுக்கப்பட்டு விட்டதாம், இனி அவரது செயல்பாடுகளே அவரின் அமைச்சர் பதவியை பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது.