India

மாறுவேடத்தில் சென்ற மத்திய அமைச்சர் மாண்டியா, சிக்கிய திராவிட ஸ்டாக் அமைச்சர் பிடிஆர்!

mandviya and ptr
mandviya and ptr

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் வளைகாப்பு பேச்சையும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டிவியா சமீபத்தில் செய்த செயல்பாடுகளையும் ஒப்பிட்டு இந்தியா முழுவதும் இதுதான் உங்கள் திராவிட ஸ்டாக்கா என கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.


சமீபத்தில் உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த GST கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வியை தமிழக நிதி அமைச்சரிடம் கேட்க, நிகழ்ச்சி அழைப்பு லேட்டாக வந்ததாகவும், அதற்குள் வளைகாப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டும் என்பதால் கூட்டத்திற்கு செல்லவில்லை என தெரிவித்தார் தியாகராஜன்.

GST கூட்டம் என்பது 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு போன்று முக்கியமான கூட்டம் இங்குதான் மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய நிலுவை தொகை, வரி வருவாய் பங்கீடு, வரி மாற்றம் உள்ளிட்டவற்றை பேச முடியும் ஆனால் அதை விடுத்து வளைகாப்பு முக்கியமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப இந்தியா முழுவதும் திமுக அரசாங்கத்தின் செயல்பாடு கடும் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.

இந்த நிலையில் மத்திய சுகாதார துறை அமைச்சர் மாட்டுவேடத்தில் சென்று அரசு மருத்துவமனையை பார்வையிட்டது குறித்தும், அங்கு அவருக்கு நடந்த சம்பவம் குறித்தும் பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது, இந்நிலையில் பாஜக அமைச்சர் செயல்பாடு, திமுக அமைச்சர் செயல்பாடு இரண்டையும் ஒப்பிட்டு எது சிறந்தது என நீங்களே முடிவு செய்யுங்கள் எனவும் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர் 

49 வயதான மன்சுக் மாண்டவ்யா சமீபத்தில் மத்திய சுகாதார அமைச்சரானார். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளூர் டாக்டர் ஹர்ஷவர்தன்  பிரபலமான மருத்துவர் & அரசியல்வாதி. அனைவரும் அறிந்தவர். ஆனால், குஜராத்தை சேர்ந்த மாண்டவ்யாவை டில்லி மருத்துவமனைகள் பலவற்றுக்கு தெரியாது.  சுகாதார துறை குறைகளை அறிந்து கொள்ள, சாமானியனைப் போல, டில்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் பொது நோயாளி பிரிவுக்கு சென்றிருக்கிறார் மாண்டவ்யா. 

சஃப்தர்ஜங் மருத்துவமனை சென்ற மாண்டவ்யா, அங்கிருந்த பெஞ்சில் (bench) அமர, மருத்துவமனை காவலாளி அவரை வசைபாடியிருக்கிறார். அங்கே உட்காரக் கூடாது என்று சொன்னதோடு, மாண்டவ்யாவை அடித்திருக்கிறார். பல நோயாளிகள் தங்களுக்கு தேவையான ஸ்ட்ரெட்சர் (stretcher) உள்ளிட்டவற்றை பெற முடியாமல் அவதிப்பட்டதை பார்த்திருக்கிறார் மாண்டவ்யா. 

"1500 காவலாளிகள் (guard) இருக்கும் இந்த மருத்துவமனையில் ஏன் ஒருவர் கூட உதவி செய்ய மறுக்கிறீர்கள்?" என்று மாண்டவ்யா காவலாளியிடம் கேட்க, பதிலில்லை. இதை பிரதமருக்கு தெரிவிக்க, பிரதமரும் கோபப்பட்டு, "அந்த காவலாளி மீது நடவடிக்கை எடுத்தீர்களா?" என்று மாண்டவ்யாவை கேட்டிருக்கிறார்.மாண்டவ்யா பதிலுக்கு, "அமைப்பை மேம்படுத்த முயற்சிக்கிறேன் (trying to improve the system). தனி மனிதனை (காவலாளியை) அல்ல" என்று கூறிவிட்டார் என்கிறது  பிரபல பத்திரிகை -INDIA TIMES

இப்படியும் ஒரு அமைச்சரா? என பத்திரிகையாளர்கள் புகழ் மாலை சூட, இப்படியும் ஒரு அமைச்சர் தன் மக்களை காக்க தன் அதிகாரத்தை துறந்து சாதாரண காவலளியிடம் அடி வாங்கி இருக்கிறார், அவர் நினைத்தால் 100 அதிகாரிகளுடன் சென்று மேற்பார்வை செய்திருக்க முடியும் ஆனால் உண்மையை அறிய தானே சென்றுள்ளார்.

ஆனால் தமிழக அமைச்சர் தியாகராஜனோ செல்லவேண்டிய இடத்திற்கு செல்லாமல் வளைகாப்பு இருக்கு என சாக்கு போக்கு சொல்லி தனது மாநில மக்களின் எதிர்கால கனவில் மண்ணள்ளி போட்டுள்ளார் இப்படியும் ஒரு அமைச்சர் என நெட்டிசன்கள் மட்டுமல்லாமல் தீவிர இடதுசாரிய சிந்தனை கொண்ட பத்திரிகையாளர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் செயல்பாடு மூலம் கடுமையாக சிக்கியுள்ளார் பழனிவேல் தியாகராஜன்.