தமிழ் சினிமாக்கள் தெலுங்கு, கன்னடம் என பல இடங்களில் மாஸ் காட்டிய காலம் மாறி இப்போது தெலுங்கு மற்றும் கன்னட சினிமாக்கள் தமிழகத்தில் மாஸ் காட்டி வருகின்றன சமீபத்தில் வெளியான விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவியுள்ளது. அதே நேரத்தில் கன்னட நடிகர் நடித்த KGF 2 திரைப்படம் பெரும் வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது.
தமிழ் தமிழர் என பேசி பேசி தற்போது தமிழகத்தில் கூட தமிழ் நடிகர்கள் படங்கள் ஓடாத சூழல் உண்டாகி இருக்கிறது, இதற்கு முக்கிய காரணம் கடந்த 10 வருடங்களில் தமிழ் சினிமாவை குழி தோண்டி புதைத்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்களையே சாரும். தொடர்ந்து இந்திய கலாச்சாரம், இந்து மதத்திற்கு அல்லது ஏதேனும் இரு சாதியை மையப்படுத்தி படங்களை வெளியிட்டு தமிழ் சினிமாவின் தரத்தை பலர் குறைத்து விட்டனர்.
எப்போதும் அவன் அடிக்கிறான் இவன் என்ன 30 வருடங்களுக்கு முன்னர் அடக்கி வைத்து இருந்தான் என படத்தை எடுக்கும் ஒரு தரப்பு, பெரியாரிஸம் என்ற போர்வையில் இந்து மதத்தை விமர்சனம் செய்து படம் எடுக்கும் ஒரு தரப்பு இப்படி மாற்றி மாற்றி படத்தை எடுத்து அரசியல் ரீதியாக படத்தின் நாயகர்களும், இயக்குனர்களும் வெற்றி பெற்றார்களே தவிர திரைப்படம் வெற்றி பெறவில்லை.
தமிழகத்தை தாண்டி தமிழ் திரைப்படம் வெற்றி பெற்ற காலம் மாறி தற்போது தமிழகத்திற்கு உள்ளே அதுவும் தமிழ் புத்தாண்டு அன்று வெளியான தமிழ் திரைப்படம் தோல்வியை சந்திக்கிறது என்றால் தமிழ் சினிமாவின் தரத்தை புரிந்து கொள்ளலாம், தெலுங்கு திரைப்படம் RRR வெற்றி பெற அது இந்தியாவின் சிறப்பை பேசியது, கன்னட படம் KGF 2 வெற்றி பெற அது எந்த மதத்தையும் இழிவு படுத்தவில்லை.
KGF 2 திரைப்படத்தில் துபாய் சென்ற கதாநாயகன் அங்கிருந்த அரபு ஷேக் ஒருவரிடம் பேசும்போது சொல்லுவார், எல்லா மதத்தயும் எப்படி மதிக்க வேண்டும் என எங்கள் நாட்டில் சொல்லி கொடுத்து இருக்கிறார்கள் என கூறுவார், அதில் இந்தியாவின் பெருமையை ஒரே வரியில் சொல்லிவிட்டார். ஆனால் தமிழ் சினிமாவில் சூரரை போற்று என்ற திரைப்படம் ஒரு பிராமணர் கடவுள் நம்பிக்கை கொண்டவருடைய கதை, அதை அப்படியே நாயகனை பெரியாரிஸ்டாக காட்டி கதையை உல்டா செய்தனர் அதன் பலன் இப்போது தமிழ் சினிமா தமிழகத்தை தாண்டி செல்ல முடியாத சூழல் உண்டாகி இருக்கிறது.
தேசியம் பேசிய திரைப்படங்கள் எல்லை கடந்து அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெறுகின்றன, மொழி இனவாதம் பேசும் தமிழ் படங்கள் தமிழ் நாட்டிற்குள்ளே தோல்வியை தழுவுக்கின்றன. இனியாவது தமிழர்கள் பெருமையை உலகிற்கு சொல்ல ஒரு தமிழ் படம் தேசிய சிந்தனையுடன் வருமா? என பொறுத்து இருந்து பார்க்கலாம்.தமிழ் சினிமா தரத்தை நீர்த்து போக செய்யும் ஒரு சில பெரியாரிஸ்ட் ஆதரவு நடிகர்களும், இயக்குனர்களும் இனியாவது திருந்துவார்களா? தமிழ் சினிமாவின் தரத்தை பழையபடி மீட்டு எடுப்பார்களா? (உதயகுமார் செந்திவேல் )