Cinema

எனக்கென்றே வருவீர்களா? விஜய்க்கு மட்டும் ஏன் இந்த நிலை? எல்லாம் அரசியல்..!

vijay and surya
vijay and surya

விஜய் திரைப்படங்கள் வெளியாகும் போது சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகி விஜய் படத்தை வீழ்த்துவது தொடர் கதையாக மாறி வருகிறது, கடந்த முறை விஜய்யின் பிகில் படத்துடன் வெளியான கார்த்தியின் கைதி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது, இந்த முறை விஜய் படத்தை வேறு மொழி படமான KGF 2 பீட் செய்து விட்டு சென்றுள்ளது.


இது குறித்து சினிமா விமர்சகர் KRISHNA D VAIPAYANA குறிப்பிட்ட தகவல் பின்வருமாறு :- KGF 2 படம் பீஸ்ட் படத்தை விட குறைவான இடங்களில் வெளியானதால் அதிக எதிர்பார்ப்பும் டிக்கெட்டுக்கு முந்துதலும் இருக்கிறதென நினைத்தேன். தமிழின் முதன்மையான நட்சத்திரத்தை அப்படி வீழ்த்தமுடியுமா என்ற சந்தேகம் இருந்தது. ஐந்து நாட்களுக்கு பின்னான நிலவரம் எடுத்து பார்த்தேன்.

உண்மையிலேயே இந்த ஏப்ரல் 14 வெளியீட்டில் KGF 2 தான் வெற்றி பெற்றதாக தெரிகிறது. நாளை பீஸ்ட் 84 காட்சிகளும், KGF 2 ( தமிழ்) 70 காட்சிகளும் பிற மொழிகளில் 6 காட்சிகளும் ஓடுகின்றன.  கோவையில் உள்ள மூன்று மால்களில் நாளைய காட்சிகளின்  எண்ணிக்கை எடுத்து பார்த்தேன். 

ப்ரூக்பீல்ட

----------

பீஸ்ட்  - 8 காட்சிகள்  KGF 2 (தமிழ்) - 10 காட்சிகள் KGF 2 (ஹிந்தி) - 2 காட்சிகள்  KGF 2 (கன்னடா ) - 2 காட்சிகள் fun சினிமாஸ் 

-------------

பீஸ்ட் - 7 காட்சிகள்  KGF 2 (தமிழ்) - 7 காட்சிகள்  prozone மால் 

-------------

பீஸ்ட்  - 13 காட்சிகள்  KGF 2 (தமிழ்) - 16 காட்சிகள் KGF 2 (ஹிந்தி) - 1 காட்சி KGF 2 (தெலுங்கு) - 1 காட்சி

இதற்கு ஒரு காரணம் பார்க்க வேண்டிய பலர் இந்த ஐந்து நாட்களில் ஏற்கனவே பார்த்து விட்டனர் என்பதாக கூட இருக்கலாம். KGF 2 படத்திற்கு இந்த முதல் நான்கு நாட்களில் பீஸ்டிற்கு கிடைத்த திரையரங்கு எண்ணிக்கையில் பாதி தான் கிடைத்தது. இன்னொன்று, KGF 2 காட்சிகள் பெரும்பாலும் புக் செய்யப்பட்தாக காட்ட பீஸ்ட் பல காட்சிகள் இன்னமும் பாதி கூட நிரம்பவில்லை என்று தெரிகிறது.

இந்த வெள்ளிக்கு பின் திரையரங்கு காட்சிகளின் எண்ணிக்கை பொறுத்து எப்படத்திற்கு தொடர் வரவேற்பு இருக்கிறது என்று தெரிந்துவிடும். பிகில் வந்தப்போது கார்த்தியின் கைதி அதன் ஓட்டத்திற்கு குறுக்கால வந்தது. தற்போது பக்கத்து மாநில படம். எனக்குன்னே வருவீங்களாடா என்று விஜய் எண்ணக் கூடும். Better luck next time  என குறிப்பிட்டுள்ளார்.

விஜய், சூர்யா இன்னும் பல தமிழ் நடிகர்களின் படங்கள் பெரிய வரவேற்பை பெறாமல் போக இவர்களின் அரசியல் நிலைப்பாடே காரணம் என கூறப்படுகிறது.