Cinema

"உண்மையை வெளிப்படையாக" சொல்லிய விஜய்யின் தந்தை உறுதியான சம்பவம்..!

actor vijay, SAC
actor vijay, SAC

தமிழக திரை துறையை சேர்ந்த முக்கிய ஹீரோக்கள் தயாரிப்பாளர்கள் போன்றோரை ஒரு சில அரசியல் முக்கிய புள்ளிகள் மிரட்டி வருவதாகவும் தங்கள் மூலம்தான் திரைப்படத்தை வெளியிட வேண்டும் என அழுத்தம் கொடுப்பதாகவும் பல நாட்களாக திரை துறையை சேர்ந்த பலர் குற்றசாட்டாக கூறிவந்தனர்.


நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்திரன் மற்றும் அவரது தாய் இருவரும் மாநாடு திரைப்படம் வெளியாவதில் பெரும் சிக்கல் கொடுப்பதாகவும் இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வீட்டின் முன்பு தர்ணாவில்  ஈடுபட போவதாக தெரிவித்தது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இந்த சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்திக்க முக்கிய நடிகர் ஒருவர் முயற்சி செய்து வருவதாக நமது TNNEWS24AIR இணையதளத்தில் முதல் முறையாக நாம் செய்தி வெளியிட்டோம் அதில் முழுமையான தகவல்களை கொடுத்து இருந்தோம். (அதனை படிக்க கிளிக்.)

அதில் சொல்லப்பட்டது போன்று தமிழக திரை துறையில் உண்மையில் ஆளும் கட்சியை சேர்ந்த நபர்களின் அழுத்தம் இருப்பது உண்மையை என விஜய்யின் தந்தை SA.சந்திரசேகர் தனியார் ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியின் மூலம் தெரியவந்துள்ளது. நேர்காணல் நடத்திய அசோகவர்ஷினி தற்போது தமிழக "திரை துறை மீது ஒரு வித அழுத்தம் இருப்பதாக கூறப்படுகிறது, இது பற்றிய உங்கள் பார்வை என்ன என கேட்டார்.

அதற்கு S.A.C பூசி மொழுகாமல் ஆமாம் 10-12 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் தற்போது திரை துறையில் தலையீடுகள் இருக்கின்றன, இதனை முதல்வர் அறிந்து நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உண்மையை வெளிப்படையாக தெரிவித்தார். இதன் மூலம் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது, உண்மையில் விஜய் பீஸ்ட் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தாரா? இல்லை தயாரிப்பு நிறுவனம் வற்புறுத்தல் காரணமாக ஏற்று கொள்ளும் சூழல் உண்டாகியதா என்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அதோடு இயக்குனர் பாண்டியராஜ் கடைசியாக சூர்யாவை வைத்து இயக்கிய எதற்கும் துணிந்தவன் படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசுகையில், நான் சூர்யாவிடம் ஒரு கதை சொன்னேன், அதை தயாரிப்பு நிறுவனத்துடன் சொன்ன போது அந்த கதைக்கு பதிலாக எதற்கும் துணிந்தவன் படத்தை எடுக்கலாம் என சொன்னதால் உடனடியாக இந்த கதையை(எதற்கும் துணிந்தவன் )எடுக்க வேண்டியதாக போனதாக குறிப்பிட்டு இருந்தார்.

இதன் மூலம் மொத்த திரை உலகமும் இரண்டு நிறுவனங்களிடம் சிக்கி சிதைந்து வருவது வெளிப்படையாக தெரியவந்துள்ளது, இந்த சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எங்களுக்கு திரை துறையை சேர்ந்த எந்த நண்பர்களும் எதிரியில்லை எங்களது ஒரே எதிரி திராவிட முன்னேற்ற கழகம் மட்டும்தான் என கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதன் மூலம் தமிழகத்தில் நிலவும் பால்வேறு அழுத்தம் காரணமாக திரை துறையினர்  மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சியான பாஜகவுடன் நெருக்கமாக போவது என முடிவு எடுத்து இருக்கிறார்களாம் அதனை வரவேற்கும் விதமாகத்தான் அண்ணாமலை தமிழக சினிமா துறையினரிடம் எங்களுக்கு எந்த வித முன்விரோதமும் இல்லை என குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.