எழுத்தாளர் மாரிதாஸ் வீட்டை சுற்றி 20 மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு இருக்கும் சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது, மதுரையில் உள்ள எழுத்தாளர் மாரிதாஸ் வீட்டின் எதிரே காவலர்கள் நள்ளிரவு முதல் குவிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் நிதி அமைச்சர் தியாகராஜன் பேசிய வார்த்தைகளை குறிப்பிட்டு வீடியோ ஒன்றிணை வெளியிட்டு இருந்தார் மாரிதாஸ் அதில் பல்வேறு கேள்விகளை நிதி அமைச்சர் தியாகராஜனிடம் எழுப்பிய மாரிதாஸ், எதன் அடிப்படையில் பெருமை பேசி திரியும் மனிதருக்கு மதுரை மக்கள் வாக்களித்தார்கள் எனவும் கேள்வி எழுப்பினார், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இதையடுத்து அமைச்சர் தரப்பு காவல்துறை மூலம் கைது நடவடிக்கையில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது, இதையொட்டி காவலர்கள் குவிக்கப்பட்டு இருப்பதாகவும் நள்ளிரவு நேரத்தில் கைது செய்தால், விவகாரம் வேறு நிலைக்கு செல்லலாம் என்பதால் தற்போது வரை காவலர்கள் காத்து இருப்பதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் மாரிதாஸை கைது செய்தால் அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அமையலாம் எனவும், தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக மேலிருந்து வந்த தகவலால் போலீசார் அமைதியாக திரும்பி செல்லலாம் எனவும் கூறப்படுகிறது.
மாநிலத்தில் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து கிஷோர் கே ஸ்வாமி உள்ளிட்ட திமுகவை எதிர்த்து கேள்வி எழுப்பிய பலர் கைது செய்யபட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவங்கள் அரங்கேறி வரும் சூழலில் இது முழுக்க முழுக்க திமுக அரசின் பழிவாங்கும் செயல் என பாஜகவினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
காவல்துறையை பொறுத்தமட்டில் மாரிதாஸிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அவரது வீட்டிற்கு பாதுகாப்பிற்கு சென்றதாகவும் இரவில் 20 காவலர்கள் சென்ற நிலையில் தற்போது 5 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பதாக கூறப்படுகிறது.