அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்து தேசிய தலைமை மகிழ்ச்சி அடைந்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இடப்பங்கீட்டில் அதிமுக,பாஜக இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர் இழுப்பறி நீடித்து வந்த நிலையில், தமிழகத்தில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடுவதாக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அதிரடியாக அறிவித்தார்.
ஆனால் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் என்று அவர் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், சென்னை,மதுரை,கோவை,ஒசூர் உள்ளிட்ட 14 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேருராட்சிகள் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதில் சென்னையில் மட்டும் 112 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “ நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மாநகராட்சிக்கு 353 பேர், நகராட்சிகளுக்கு 129 பேர், டவுன் பஞ்சாயத்துகளுக்கு 119 பேர் அடங்கிய முதல் பட்டியல் வெளியிடப்பட்டது. இவர்கள் அனைவரும் நமது மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துச் செல்வதற்கான தூதர்கள். அனைவரும் வெற்றிபெற வாழ்த்துக்கள்” என்று தெரிவித்து இருந்தார்.
இந்த சூழலில் பாஜக இட பங்கீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தெளிவான கருத்தை சொல்லவில்லை எனவும், சட்டமன்ற தேர்தலில் பல்வேறு காரணங்களை சொல்லி பாஜகவிற்கு குறைவான தொகுதிகளை ஒதுக்கீடு செய்தார்கள், அதே பாணியில் இப்போது 13% இடங்கள் மட்டுமே கொடுக்க முடியும் என்கிறார்கள் அதிலும் நாம் நினைத்த இடங்கள் கிடைக்குமா என்பது கேள்விக்குறி எனவே இந்த தேர்தலில் நாம் தனித்து போட்டியிடலாம் இதில் நல்லது என்னவென்றால் அனைத்து இடங்களிலும் நம் சின்னம் செல்லும் அத்துடன் நமது வாக்கு சதவிகிதம் என்ன என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் எனவும் அண்ணாமலை தேசிய தலைமையிடம் தெரிவித்து இருக்கிறார்.
இதற்கு தேசிய தலைமையும் ஒப்புதல் கொடுத்துள்ளதால் உடனடியாக தனித்து போட்டியிடுவது என அறிவித்து இருக்கிறார் அண்ணாமலை, இதுதான் நடந்து இருக்கிறது, இதில் மற்றொரு முக்கிய விவகாரம் என்னவென்றால் லாவண்யா விவகாரத்தை அண்ணாமலை கையில் எடுத்து அதனை கொண்டு சென்ற விவகாரம் பெரிய அளவில் தலைநகரான டெல்லியில் எதிரொலித்துள்ளது அண்ணாமலை நகர்வுகள் டெல்லிக்கு மிக பெரிய அளவில் தமிழகத்தில் பாஜக வளரும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளதாம் எனவே இனி வரும் காலங்களில் தமிழகத்தில் கூட்டணியிலும் சரி, எதிர் தரப்பிலும் சரி பல்வேறு அதிரடி மாற்றங்கள் உண்டாகும் என்று உறுதியாக நம்பலாம்.
More watch videos