Cinema

அடுத்த விஜய் நீதான்...! பிரபலத்தின் மனதில் விதை போடும் நண்பர்கள்...!

Vijay, Sivakarthikeyan
Vijay, Sivakarthikeyan

சினிமாவில் ஒருவர் சென்று விட்டால் அவரது இடத்தை பிடிக்க மொத்த திரையுலகமும் போட்டி போடும். அந்த வகையில் தான் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி சினிமாவில் இருந்து ஒதுங்கிய போது அந்த இடத்தி வடிவேலு பிடிப்பார் என சினிமா வட்டாரங்கள் எதிர்பார்த்த போது அந்த இடத்தில் கால் பதித்தார் நடிகர் சந்தானம். கவுண்டமணி ஸ்டையிலில் மற்றவர்களை கலாய்த்து வெற்றி இடத்தை பிடித்தவர் சந்தானம். பல பட வாய்ப்புகள் அமைந்தது அப்போது சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வந்தவர். 


ஒரு கட்டத்தில் நடிகராக அவதாரம் எடுத்த சந்தானம் அந்த இடத்தை யோகிபாபு பிடித்தார். தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் மறைந்த போது அவரது இடத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடத்தை பிடித்தார். சூப்பர் ஸ்டார் இருக்கும்போது அந்த இடத்தில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என கூறியபோது விஜயும் எதிர்பார்ப்பில் காத்திருந்தார். ஆனால், ரஜினி காக்கா-கழுகு கதையை கூறி அந்த இடத்தை யாருக்கும் விட்டு தரமாட்டேன் என கூறி முற்றுபுள்ளி வைத்தார். சினிமாவில் ரஜினிக்கு பிறகு அந்த இடத்தில் நிச்சயம் விஜய் தான் பங்கேற்பார் என கூறப்பட்டது. 

விஜயே இனி சினிமா வேண்டாம் என அரசியலுக்கு வந்து சினிமாவுக்கு முழுக்கு போட்டார். இதையடுத்து ‘விஜயின் இடத்தை பிடிக்கப்போவது யார்?’ என்கிற கேள்வியும் திரையுலகில் எழுந்துள்ளது. குறிப்பாக இனி அஜித் ரசிகர்கள் விஜய் இல்லையென்றால் நாங்கள் யாருடன் போட்டி போடுவோம் என்றும் படம் வெளியாகும்போது யாரு படத்திற்கு அதிக வசூல் வரும் என்பதை யாருடன் இனி ஒப்பிட போறோம் என புலம்பி வருகின்றனர். விஜய்யின் இடத்தை பல நடிகர்கள் நிரப்ப ஆசைப்பட்டாலும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஒரு படி மேலே சென்று உள்ளாராம். 

சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் நகைச்சுவை கலந்த படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் மெல்ல மெல்ல வளர்ந்து தற்போது ஆக்ஷன் கலந்த படத்தில் நடித்து வருகிறார். ரஜினி, விஜய் பாணியில் கமர்ஷியல் கதைகளில் நடித்து குழந்தைகளுக்கும் பிடித்த நடிகராக மாறினார் சிவகார்த்திகேயன். இது எல்லோக்கும் அமையாது. குழந்தைகளுக்கு யாரை பிடிக்கிறதோ அவர்தான் சூப்பர்ஸ்டார் என்பதுதான் தமிழ் சினிமா இதுவரை பார்த்த வரலாறு. அதை நோக்கிய பயணித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் கூட குழந்தைகளுக்கு பிடித்தது போல் ஏலியன் படத்தில் நடித்து வெளியான அந்த படம் ஹிட் கொடுத்து குழந்தைகள் இடத்தில் சிவகார்த்திகேயன் இடம் பிடித்தார்.

தற்போது, சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸ் உடன் கூட்டணியில் இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களை கொண்டு இயக்கிய முருகதாஸ் தாப்ரோது சிவாவுடன் இணைந்துள்ளதால். விஜய்க்கு எப்படி துப்பாக்கி, கத்தி படம் கைகொடுத்ததோ அதே போல் சிவகார்த்திகேயனுக்கு முருகதாஸ் ஹிட் படங்களை கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஒருபக்கம், கதைகளை கவனமாக கேட்டு வருகிறாராம். ஆனால், எப்படி ஒரு ரஜினியோ அப்படி ஒரு விஜய்தான். அவரின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது என்கிற கருத்தும் நிலவி வருகிறது. சிவகார்த்திகேயன் விஜய் இடத்தை பிடிப்பாரா மக்கள் அதனை ஏற்று கொள்ளுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.