சினிமாவில் இருக்கக்கூடிய நடிகைகளின் திருமணமா என்பது ஒன்று யாருக்கும் தெரியாமல் நடந்து முடிந்து விடுகிறது. இல்லையேல் கல்யாணம் செய்வதையே அவுட் ஆப் பேஷன் ஆகிவிட்டனர். இந்நிலையில் பாலிவுட்டில் தனது திரைப்பயணத்தை தொடங்கி சத்தமிழில் பல படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங் தற்போது இவருக்கு கல்யாணம் நடக்க இருப்பதாக சில தகவல் வந்துள்ளன. தமிழில் முன்ணனி நடிகர்களுடன் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங்.
தமிழில் தடையற்க தாக்க படம் மூலம் முன்னணி நாயகியாக எண்ட்ரி கொடுத்தவர். தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தவர் அதன் பிறகு முன்னணி நடிகர்களான கார்த்தியுடன் இணைந்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்திருந்தார். அதில் பெரியதாக அவரது ரோல் செட் ஆகவில்லை. அதன் பிற்காடு அவரது அண்ணன் சுராயவுடன் இணைந்து என்ஜிகே படத்தில் நடித்திருந்தார் அதிலும் நாயகியாக நடித்த சாய் பல்லவி கொடுத்த முக்கியத்துவம் கூட ரகுல் ப்ரீத் சிங்குக்கு கொடுக்கப்படவில்லை என பேசப்பட்டது. ஆனால், அந்த படம் பெரியதாக ஓடவில்லை இதனால் சினிமாவில் இருந்து குறிப்பாக தமிழில் நடிப்பதை தள்ளி போட்டதாக சில தகவல் வந்தாலும் அவருக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
தற்போது, சிறிய கேப்புக்கு பிறகு தமிழில் இன்றி கொடுத்தார் சிவகார்த்திகேயனுடன் ஏலியன் படம் மூலம் அந்த படத்திலும் பெரிய தாக்கம் இருக்கும் அளவுக்கு அவருக்கு ரோல் அமையவில்லை. மேலும் அந்த படம் சுமார் 5 வருடங்களுக்கு பிறகு எடுத்ததாக கூறப்பட்டது. அதனால் அந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங்குக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வந்து கொண்டிருக்க. இந்த படம் அப்போதே வெளியாகி இருந்தால் சூர்யாவுடன் நடித்த பிறகு தலை முழுகியது இது நாள் வரை சினிமாவில் எட்டி பார்க்காமல் இருந்து இருக்கலாம் என ஒரு பக்கம் பேசப்படுகிறது.
தெலுங்கு மற்றும் இந்தியிலும் பிஸியாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது தன்னுடைய நீண்டகால காதலரை கல்யாணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. பாலிவுட்டில் தயாரிப்பாளராக இருக்கும் ஜாக்கி பக்நாணியுடன் சில வருடமாக ரிலேசன்ஷிப்பில் இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். இந்நிலையில் இரு வீட்டாரும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து இருக்கிறார்களாம். முதலில் வெளிநாட்டில் இந்த திருமணத்தினை செய்ய முடிவெடுக்கப்பட்டதாம்.
ஆனால் பிரதமர் மோடி வெளிநாட்டில் விஷேசங்களை கொண்டாட வேண்டாம். நம் நாட்டிலேயே செய்யுங்கள் என மக்களுக்கு அறிவுரை வழங்கினார். அதை கருத்தில் கொண்டு கோவாவில் திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கிறார்களாம். இருவரும் தங்கள் காதலை அறிந்த இடம் என்பதாலே கோவா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறதாம். இவர்களது திருமணம் என்பது பெரிய அளவில் இல்லாமல் இந்த மாதம் இறுதியில் திருமணம் செய்து கொள்ளவும் இங்கு ஊடங்கங்களுக்கு அனுமதி இல்லை என ஸ்ட்ரிக்ட்டாக கண்டிஷன் போட்டுள்ளாராம் ரகுல் ப்ரீத் சிங். தற்போது இந்திய 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.