Cinema

தப்பிய சூர்யா சிக்கிய கார்த்தி திரையரங்கு "பனால்" சொல்லி அடிக்கும் எதிர் தரப்பு !

surya and karthi
surya and karthi

நடிகர் சூர்யா தொடங்கிவைத்த சர்ச்சை தற்போது அவரது தம்பியான கார்த்தி பக்கம் திரும்பியுள்ளது:  புதிமுக இயக்குனர் ஞானவேல் என்பவர் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து, தயாரித்து வெளிவந்த திரைப்படம்  ஜெய் பீம் திரைப்படம் வணிக ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் வெற்றி அடைந்தது.


அதே சமயம் ஜெய் பீம் திரைப்படத்தில் இருளர் பழங்குடி இனத்தை சேர்ந்த ராஜாக்கண்ணுவை போலீஸ் லாக் அப்பில் சித்தரவதை செய்து கொலை செய்த போலீஸ் எஸ்.ஐ-க்கு குருமூர்த்தி என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது.

மேலும் அவருடைய வீட்டில் வன்னியர்கள் தலையில் சுமக்கும் அக்னி கலசம் காலண்டரில் இடம் பெற்று இருந்தது. இதற்கு, வன்னியர்கள் தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. உண்மையான குற்றவாளி பெயர் அந்தோணி சாமி அவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

அவர் பெயரை படத்தில் வைக்காமலும் பின்னால் வன்னியர் அடையாளத்தை போட்டும் திட்டமிட்டு வன்னியர்களை சூர்யா இழிவுப்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது, இதையடுத்து ஜெய் பீம் படக்குழுவினர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காலண்டர் படத்தில் இருந்து அக்னி கலசத்தை அகற்றினர்.

ஆனாலும் படம் உண்மை கதை என சூர்யா சொன்ன நிலையில் உண்மையான குற்றவாளி அந்தோணி சாமி பெயரை ஏன் வைக்கவில்லை அவர் கிறிஸ்தவர் என்பதால் சூர்யா திட்டமிட்டு மறைக்க பாக்கிறார் மேலும் உதவிய பஞ்சாயத்து தலைவரை தவறாக படத்தில் வில்லனாக சித்தரித்து உள்ளனர் என. எதிர்ப்பு வலுக்க சூர்யாவிற்கு அன்புமணி ஜெய்பீம் திரைப்படம் குறித்து 9 கேள்வியை எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அறிக்கை வெளியிட்ட சூர்யா அன்புமணியின் புரிதல் தவறு என்றும் தான் விளம்பரம் தேடவேண்டிய அவசியம் இல்லை எனவும் படைப்பு சுதந்திரதிற்கு எதிர்ப்பது சரியல்ல என பதில் அறிக்கை கொடுக்க விஷயம் மீண்டும் வெடித்துள்ளது.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டு சூர்யாவின் உருவ படத்தை எரித்து சூர்யாவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து சூர்யாவின் ரசிகர்கள் பாமக மாவட்ட செயலாளர் பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமையில் பாமகவில் இணைந்தனர். அப்போது, வன்னியர்களை இழிவு படுத்தும் வகையில் வெளியாகி உள்ளது.எனவே ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையெனில் ஜெய் பீம் திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்றும் கண்டன கோஷம் எழுப்பினர். இச்சம்பவம் சூர்யா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள

நிலையில் வன்னியர் அமைப்பினர் சூர்யா ஜெய்பீம் திரைப்படம் குறித்து மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சூர்யா குடும்பத்தினரின் எந்த படத்தையும் திரையரங்கில் வெளியிடுவது இல்லை என்ற முடிவிற்கு வந்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே திரையரங்கில் படத்தை வெளியிடாத சூர்யா குடும்பத்தினர் அவர்கள் தயாரிக்கும் படங்கள் தியேட்டரில் ஓடாது என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் எச்சரிக்கை விடுத்த சூழலில் இப்போது வன்னியர் அமைப்பினரும் முடிவை எடுத்துள்ள காரணத்தால் விரைவில் திரைக்கு வர இருக்கும் கார்த்தியின் சர்தார் படக்குழு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்த விவகாரம் தன் பக்கம் திரும்பக்கூடாது என்றுதான் நடிகர் கார்த்தி, ஜெய்பீம் சர்ச்சை குறித்து வாயே திறக்கவில்லையாம், சூர்யா தனது திரைப்படத்தை சூரரை போற்று, ஜெய்பீம் என அமெசான் ஒ. டி. டி தளத்தில் வெளியிட்டு தப்பித்து கொண்ட நிலையில் தியேட்டரில் படத்தை வெளியிடலாம் என இருந்த கார்த்திக்கு தற்போது இந்த செய்தி பேரிடியாக அமைந்து இருக்கிறது.

ஏற்கனவே புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த டாக்டர் ஷ்யாம் கிருஷ்ணசாமி பக்குவமாக எடுத்து சொன்னால் நடிகர்கள் கேட்க மாட்டார்கள், ஹீரோவிற்கும் தயாரிப்பாளருக்கும் புரியும் மொழியில் பதில் சொன்னால் மட்டுமே புரியும் என நேற்றே ட்விட்டரில் பதிவிட்டது குறிப்பிடித்தக்கது.

நல்ல வேலை இந்த திரைப்படம் திரையில் வரவில்லை வந்தால் என்ன நடக்குமென்பதை சூர்யா புரிந்து கொண்டு இருப்பார் என நேற்று தனியார் ஊடகம் ஒன்றில் நடந்த விவாதத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது , அந்த வீடியோ காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது .