நடிகர் சூர்யாவின் கடந்த கால அரசியல் நிலைப்பாடு காரணமாக தற்போது ஏதேனும் ஒரு விவகாரத்தில் சூர்யா அரசியல் நிலைப்பாடு எடுக்கவில்லை என்றாலும் சூர்யாவை நோக்கி அம்புகள் பாய்ந்து வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறவர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை தமிழக அமைச்சர் KKSSR.ராமசந்திரன் உட்கார கூட வைக்காமல் நிற்கவைத்து அவமானப்படுத்தியதாக புகைப்படம் ஒன்று வைரலான நிலையில், கடந் ஆட்சியில் பல்வேறு விவாகரங்களுக்கு குரல் கொடுத்த சூர்யா இப்போ எங்கே சென்றார் ஜெய் பீம் படத்தில் குறவர் சமுதாய மக்களுக்கு நீதி கிடைக்க செய்தது போன்று காட்சிகளில் மட்டும்தான் நடிப்பீர்களா? நேரில் அமைச்சரை கேள்வி கேட்க மாட்டீர்களா? என்றெல்லாம் கேள்வி சமூக வலைத்தளங்களில் எழுந்தது.
இது போனவாரம் என்றால் தற்போது புதிதாக பெண் மருத்துவர் பேசிய பேச்சுக்கள் மூலம் மீண்டும் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறார் சூர்யா, அண்ணாமலை கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய பெண் மருத்துவர், நீங்கள் திரையில் பார்க்கும் சிங்கம் எல்லாம் சும்மா வேஸ்ட் உண்மையான சிங்கம் அண்ணாமலைதான்.
கர்நாடகாவில் அவர் செயல்பட்ட விதத்தை மேற்கோள் காட்டி பேசி இருந்தார் இதை வைத்து கொண்டு ரீல் சிங்கம் என நெட்டிசன்கள் கிண்டல் அடிக்க தொடங்கி தற்போது மீம்ஸ் விடீயோக்களும் பகிர்ந்து வருகின்றனர். இந்த ட்ரோல் வீடீயோக்களை பார்த்த சூர்யா தரப்போ... நாங்க பாட்டுக்கு சிவனேனு இருக்கோம் உங்க திமுக vs பாஜக பஞ்சாயத்தில் எங்களை ஏன் இழுக்குறீர்கள் என புலம்பி வருகின்றனர். பெண் மருத்துவர் பேசிய வீடியோ TNNEWS24 DIGITAL யூடுப் பக்கத்தில் உள்ளது.