Cinema

PFI தடை செய்யப்பட்ட நிலையில் இயக்குனர் "மோகன்" போட்ட சரவெடி பதிவால் பரபரப்பு!

Amitshah, director mohan g
Amitshah, director mohan g

நாடு முழுவதும் PFI இயக்கம் மீதும் அதன் கிளை அமைப்புகள் மீதும் அதிரடி சோதனையை NIA மற்றும் அமலாக்கத்துறையினர் மேற்கொண்டனர், இதனை தொடர்ந்து பல்வேறு ஆதாரங்கள் சிக்கியதை தொடர்ந்து முக்கியமான பலர் கைது செய்யப்பட்டனர், இந்த சூழலில்


பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் நேற்று மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் உத்தர பிரதேசம், குஜராத், கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பி.எஃப்.ஐ நிர்வாகிகள் வீடுகளில் காவல்துறை சோதனை மேற்கொண்டது. நேற்று நடைபெற்ற சோதனைக்கு பின்னர், நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தது.

அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், அதற்கு ஐந்து ஆண்டுகள் தடைவிதித்திருக்கிறது. சட்டவிரோத பணிக்கான பணப் பரிவர்த்தனை, பிரதமர் மோடியை கொல்ல சதி என பல்வேறு குற்றசாட்டுகளை அந்த அமைப்பின் மீது என்.ஐ.ஏ சுமத்தியிருக்கிறது.இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

"பி.எஃப்.ஐ மற்றும் அதன் துணை நிறுவனங்கள் சமூக-பொருளாதார, கல்வி மற்றும் அரசியல் அமைப்பாக வெளிப்படையாக செயல்படுகின்றன, ஆனால், அவர்கள் ஒரு குறிப்பிட்ட தீவிரவாத ரகசிய நிகழ்ச்சி நிரலை பின்பற்றி வருகின்றனர். சமூகத்தின் ஒரு பிரிவினர் ஜனநாயகத்தின் கருத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கில் செயல்படுகிறார்கள் மற்றும் நாட்டின் அரசியலமைப்பு அதிகாரம் மற்றும் அரசியலமைப்புக்கு முற்றிலும் அவமரியாதை செய்கின்றனர்" எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் ராமலிங்கம் மற்றும் சசிகுமார் கொலையில் PFI க்கு தொடர்பு இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டது.இந்த சூழலில் பிரபல இயக்குனர் மோகன் ஜி தனது சமூக வலைத்தள பக்கங்களில், திருபுவனம் இராமலிங்கம் அண்ணன் அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்.. என குறிப்பிட்டுள்ளார்.

PFI அமைப்பு தடை செய்யப்பட்ட சூழலில் இந்த கருத்தை அதிரடியாக மோகன் தெரிவித்து இருப்பது உண்மையில் சினிமா துறையில் இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்ற நிம்மதியை கொடுத்துள்ளது.