படத்தை பார்த்துவிட்டு பாக்ஸர் ஜான்பால் சொன்ன ஒரே வாக்கியம் வயிற்றில் அடித்துக்கொண்டு அழும் சற்குணம் தரப்பு !rudrathaandavam movie
rudrathaandavam movie

இந்தியாவில் இந்துக்கள் சகிப்பு தன்மை கொண்டவர்களாக இருப்பதால் தான் இந்தியா அமைதியான நாடாக திகழ்வதாகவும், உண்மையான கிறிஸ்தவவனாக இந்த படத்தை வரவேற்பதாகவும், பணத்திற்காக அலையும் போலிகளை இந்த திரைப்படம் காண்பித்துள்ளது எனவும் பாக்ஸர் ஜான் பால் என்பவர் முக நூலில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்ட முழுமையான கருத்து பின்வருமாறு :-

ஒரு உண்மையான கிறிஸ்தவனாக இந்த ருத்ர தாண்டவம் படத்தை வரவேற்கிறேன்...படம் எல்லா மக்களையும் சென்றடைய இயக்குநர் மோகன் G அவர்களை வாழ்த்துகிறேன், ஏனென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் பல கருத்துகளை இந்த படம் மக்களுக்கு கூறுகிறது. முக்கியமாக இந்த படம் இயேசு உபதேசமாக கூறிய "வெளிவேஷக்காரனை"ப் பற்றிய கருத்தை மையமாகக் கொண்டு இருக்கிறது...மேலும் உண்மையான கிறிஸ்தவர்களுக்கும், போலி கிறிஸ்தவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை இந்த படம் கூறுகிறது.

 எப்படியென்றால் இயேசுவின் அன்பினாலும், அவருடைய உபதேசத்தினாலும் ஈர்க்கப்பட்டு அவரைப் பின்பற்றி அதற்க்காக பல கஷ்டங்களையும், பாடுகளையும் அனுபவித்து சில இடங்களில் இயேசுவுக்காக தன் உயிரையும் தியாகம் செய்த உண்மையான கிறிஸ்தவர்களுக்கும், வயிற்றுப் பிழைப்புக்காகவும், பணம் சம்பாதிக்கவும், சொத்து சேர்க்கவும், ஏழைகளை கடவுள் பெயரால் ஏமாற்றி பிழைப்பதற்காகவும்,அரசியல் வாதிகளுக்கு கிறிஸ்தவர்களை அடகு வைப்பதற்காக கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் போதனையை மறுத்து பெயரளவில் கிறிஸ்தவர்களாக வாழும் போலி கிறிஸ்தவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை இந்த படம் சுட்டிக் காட்டுகிறது.

மேலும் நீ கிறிஸ்தவன் என்றால் உனக்கு சாதி இல்லை, உனக்கு சாதி அடையாளம் இருந்தால் நீ கிறிஸ்தவன் இல்லை என்று இயேசு தான் கூறினார் இதைத்தான் இந்த படமும் கூறுகிறது, இந்த படத்தை எதிர்ப்பவர்கள் இயேசுவின் கருத்தை தானே எதிர்க்கிறீர்கள் இவனுங்க இயேசுவின் கருத்துகளையே ஏற்றுக்கொள்ள மாட்றானுங்க உங்க கருத்தையா ஏற்றுக்கொள்ள போறானுங்க...கிறிஸ்தவர்களே சற்று சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களைப் பற்றிய உண்மையைப் பேசியதற்கே இவ்வளவு பொங்குறீங்களே, மற்ற எல்லா மதத்தினரும் சேர்ந்து கொண்டு இந்துக்களையும்,அவர்களுடைய வழிபாட்டு முறையையும் மிக மிக கீழ்த்தரமாகவும், ஆபாசமாகவும் விமர்சனம் செய்யும் போது அவர்களோட மனசு வலிக்குமே அவர்களை மனதால் காயப்படுத்துகிறோமே என்று மட்டும் உங்களுக்குத் தோனாமல் போனது ஏன், இதைத்தான் இயேசு 

1 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.2 ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்...என்று கூறினார்.3 நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? 4 இதோ உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? 5 மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய். (மத்தேயு 7:3-12-பைபிள்) கிறிஸ்தவ பாஸ்டர்களே இதெல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியாமல் போனது ஏன்.

இந்துக்கள் சகிப்புத்தன்மை அதிகம் உடையவர்கள், அனைவரையும் சகோதரராக நேசிப்பவர்கள், இவர்களால் தான் இந்தியா இன்னும் அமைதிப்பூங்காவாக இருக்கிறது நம்மால் இல்லை..உலகிலேயே மதம் மாற்றத்திற்கு தடைகளோ ,அதிக கஷ்டங்களோ இல்லாத ஒரே நாடு இந்தியா மட்டுமே ஏனென்றால் இங்கு தான் எல்லோரையும் சகோதரராக நேசிக்கும் மனம் கொண்ட இந்துக்கள் வாழ்கிறார்கள்... உங்கள் சமூக சீர்திருத்தத்தை செய்ய வாழ்த்துகள் மோகன் G அவர்களே...கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசிர்வதிப்பாராக என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது கருத்திற்கு பெரும்பாலான இந்துக்கள் ஆதரவு தெரிவித்து தெரிவித்து வருகின்றனர், உண்மையை வெளிப்படையாக சொன்ன சக இந்தியருக்கு வாழ்த்துக்கள் என பாஜகவினரும் ஆதரவு தெரிவித்து வருவதும், பாமகவினர் உள்ளிட்ட பல அமைப்புகள் நன்றி தெரிவித்து வருகின்றனர். உண்மையான கிறிஸ்தவர் ருத்ரதாண்டவம் திரைப்படம் குறித்து தெரிவித்த கருத்து தொடர்ந்து இந்து கடவுள்களை இழிவு படுத்தும் விதமாக பேசிவந்த சற்குணம், மோகன் சி லாசார்ஸ் தரப்பினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Share at :

Recent posts

View all posts

Reach out