டப்பிங் செய்து இணையத்தில் வைரலாகும் பாடல் மதுரை முழுவதும் ஒளிபரப்பு .. குலுங்கி குலுங்கி சிரிக்கும் ஊர்மக்கள் ..!ptr troll song
ptr troll song

இணையத்தளம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆக்கிரமித்துள்ளார் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் . சிறிது  நாட்களுக்கு முன்னர் உத்திரபிரதேசம் மாநிலத்தின் நிலையை கிண்டல் செய்து வசமாக வாங்கி காட்டினார் பி.டி.ஆர் , அவரது சொந்த தொகுதியில் அங்கன்வாடி மையத்தில் பன்னிகுட்டிகள் மேய்வதை எடுத்துப்போட்டு பதிலடி கொடுத்தனர் மதுரை பாஜகவினர் . இப்படி ஒரு நிலைமை இருக்க GST கவுன்சில் குறித்து  பேசி வசமாக நெட்டிசன்களிடம் சிக்கியுள்ளார் தியாகராஜன் .

GST கூட்டத்தில் பங்கேற்காததற்கு வளைகாப்பு உட்பட பல நிகழ்ச்சிகளுக்கு செல்ல இருப்பதால் GST கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என நிதி அமைச்சர் தெரிவிக்க பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன ,இந்நிலையில் தியாகராஜனை கிண்டல் செய்து ரஜினி படத்தின் பாடலை வரிகளை மாற்றி நெட்டிசன் ஒருவர் பாடலாகவே பாடியுள்ளார் .

அந்த பாடலில்  அடி ராக்கு முத்து ராக்கு நீ பிரெஸ்ஸு மீட்ட கூட்டு ..,வளைகாப்பு தங்க காப்பு ,,GST மீட்டுக்கு ஆப்பு ...  அட சன் நியூஸு சின்ராசு கேள்வியை கேட்டுக்கடா ..அட யூடடூப்பு முன்களப்பு ஆன்சர நோட் பண்ணுடா .., வளைகாப்பு முக்கியமா ? GST மீட்டு முக்கியமா சொல்லு என வருகிறது இந்த பாடல் .இந்த டப்பிங் பாடல் இணையத்தில் கடும் வைரலாக பரவி வருகிறது .

 பாடலை இணையத்தில் நெட்டிசன்கள் பரப்பி வர , தியாகராஜனின் சொந்த தொகுதியில் ஆட்டோ மூலம் எதிர்கட்சிகள்  பாடலை பரப்பி வருகின்றன ,இது நிதி அமைச்சர் ஆதரவாளர்களுக்கு கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது , திமுகவின் சமூகவலைத்தள பிரிவின் மாநில தலைவராக  இருக்கும் அமைச்சர் தியாகராஜனுக்கு எதிராக சமூகவலைத்தளத்தில் வீடியோ வைரலாகி வருவது திமுகவிற்கு தர்மசங்கடத்தை உண்டாக்கியுள்ளது . கீழே டப்பிங் பாடல் இணைக்கப்பட்டுள்ளது .


Share at :

Recent posts

View all posts

Reach out