Cinema

நேராக வீட்டிற்கு சென்ற இந்து முன்னணி இரவோடு இரவாக ஓட்டம் எடுத்த மைனர் என்பவன் எங்கே இருக்கிறான்?

tamil news
tamil news

U2 Brutus என்ற யூடியூப் சேனலை நடத்தி வருபவன் மைனர் என்ற விஜய் , தனது சேனலில் தொடர்ந்து திமுகவின் எதிர் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளான பாஜக மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளான்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் பிரச்சினை குறித்து வீடியோ வெளியிட்ட அவன் நடராஜப் பெருமான் காலை ஏன் தூக்கி வைத்து இருக்கிறார் என விளக்குவதாக ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டான் 

அந்த வீடியோவில் நடராஜர் குறித்து அவதூறாகவும், அவரது நடன அசைவுகள் குறித்து மிகவும் அசிங்கமான வார்த்தைகளில் கேவலமாக சித்தரித்து பேசினான் மேலும் பக்தர்களின் மனதை புண்படுத்தக் கூடிய வகையில் காணொளி அவரது சேனலில் ஒளிபரப்பு செய்து இருந்தான்.

இந்த நிலையில், இறைநம்பிக்கையை அவதூறாகப் பேசியதாக இந்துக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்,மேலும் அவர்களுக்கு ஆதரவாக இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர் அதனை நமது TNNEWS24 டிஜிட்டல் பக்கத்திலும் வெளியிட்டு இருந்தோம்.

இந்த சூழலில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சிலர் மைனர் என்பவனின் வீட்டிற்கு சென்று உரிய முறையில் கவனிப்பு கவனிக்க சென்றதாக கூறப்படுகிறது ஆனால் அவன் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டடதாக வீட்டில் இருந்தவர்கள் கூறி இருப்பதாக தகவல் கிடைத்தது,மைனர் என்பவனை தேடி சென்ற இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-