தமிழக அரசு ஊழியர்கள் ஒரு புறம் புலம்பி தீர்க்கும் வீடியோ வெளிவந்த நிலையில் தற்போது திரை துறையை சேர்ந்த முக்கிய நடிகர்கள், இயக்குனர்கள் குறிப்பாக தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆளும் கட்சியின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.
அதற்கு முக்கிய காரணமாக பார்க்க படுவது ஆளும் கட்சியை சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் மட்டுமே முன்னணி நடிகர்களின் திரைப்படத்தை விநியோகம் செய்வதும் அவர்களின் புதிய படங்களுக்கு தியேட்டர் ஒதுக்குவது என அனைத்தையும் அவர்கள்தான் செய்கிறார்களாம்.
தயாரிப்பாளர்கள் சங்கம் முதல் நடிகர் சங்கம் வரை யாரும் இந்த விவகாரத்தில் தலையிட்டால் தங்களது படங்களுக்கு சிக்கல் உண்டாகும் என்பதால் இதுவரை தங்கள் கண் காது வாய் என அனைத்தயும் மூடி அமைதியாக இருந்து வருகிறார்கள் திரை துறையை சேர்ந்த முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், விஜய் என எந்த நடிகரும் ஆளும் கட்சியின் தயாரிப்பில் தான் நடிக்க வேண்டிய சூழல் உண்டாக்கியுள்ளது அல்லது விநியோகம் செய்யவேண்டிய சூழல் இப்போது இருக்கிறது என்றால் எந்த அளவு சினிமாவில் ஆளும் கட்சியின் அதிகார வளையம் வளைத்து இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இந்த நிலையில் முன்னணி நடிகர் ஒருவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஒன்று தோல்வியை தழுவிய காரணத்தால் மீண்டும் கால் சீட் கேட்டு அந்த முன்னணி நடிகரை தயாரிப்பாளர் தரப்பு அணுகியுள்ளதாம், இப்போதுவரை அந்த நடிகர் தரப்பு பதில் கொடுக்காத காரணத்தால் அவரை வேறு வழிகளில் வழிக்கு கொண்டுவரும் முயற்சியை ஆளும் தரப்பு முக்கிய அரசியல் புள்ளி ஒருவர் துணையுடன் பண்ணை வீட்டில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது.
ஆனால் அந்த நடிகர் என்னால் வேறு கதை மற்றும் கதைகளம் கொண்ட திரைப்படத்தில் நடிக்க இருக்கிறேன் இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து அதே தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு படம் நடித்து கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தாராம். ஆனால் அதற்கு அந்த தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொள்ள வில்லையாம்.
2024-ம் ஆண்டிற்கு அதாவது நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு முன்பே எந்த அளவு சினிமா துறையில் தங்களது பங்களிப்பை கொண்டு செல்ல முடியுமோ அதுவரை கொண்டு செல்ல நினைக்கிறதாம்,2024 தேர்தலில் திமுகவிற்கு எதிரான சூழல் உண்டானால், திரை துறை தங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது என அந்த தரப்பு வலுவாக நம்புகிறதாம்.
இதனால் இரண்டு தரப்பிற்கும் எப்போது வேண்டுமானாலும் வெளிப்படையாக வார்த்தை போர் வெடித்தாலும் ஆச்சர்யம் இல்லை என்கின்றனர் கோலிவுட் வட்டாரங்கள். இத்தனைக்கும் அந்த நடிகர் குடும்பமே மறைமுகமாக பாஜகவை விமர்சனம் செய்து திமுகவிற்கு ஆதரவான நிலை பாட்டை எடுத்த குடும்பமாம், சமீபத்தில் கூட அந்த நட்சத்திரத்தின் தந்தை நிகழ்ச்சி ஒன்றில் ஆளும் கட்சியை வானளவு புகழ்ந்து பார்த்தும் பலன் இல்லையாம்.
இந்த சூழலில் தான் அந்த தரப்பு தேவையில்லாமல் மத்திய அரசை அதன் திட்டங்களை மாணவர்கள் படிப்பு என்ற விவாகரத்திலும் சுற்று சூழல் விவாகரத்திலும் பகைத்து கொண்டோம் அங்கும் சென்று உதவி கேட்க முடியாது, இனி என்ன செய்யலாம் என ஆழ்ந்த வேதனையில் வெளியில் சொல்ல முடியாமலும் உள்ளுக்குள் வைத்து கொள்ள முடியாமலும் நெருக்கமான வட்டாரத்தில் இருந்து புலம்பி தீர்த்து வருகிறதாம்.
இதுமட்டும் இல்லாமல் நடிகர் TR.ராஜேந்திரன் மத்திய அமைச்சர் எல்.முருகனை சந்திக்கவும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதவும் இருக்கிறாராம் அவரது குடும்பமும் மாநாடு படத்தின் வெளியீட்டு விழா தொடங்கி, படத்தின் சாட்டிலைட் உரிமை விவகாரம் வரை மிக பெரிய பஞ்சாயத்து நடந்து இருப்பதால் அவரும் இந்த விவகாரத்தில் வாய் திறக்கலாம் என கூறப்படுகிறது.
ஒட்டு மொத்தத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணியான தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக ஆகியவற்றை திரை துறையினர் எதிர்த்ததன் பலனை ஒரே வருடத்தில் அனுபவித்து வருவது தெளிவாக தெரிய தொடங்கியுள்ளது, அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு குறித்து பேசிய எந்த நடிகர்களும், திமுக ஆட்சியில் நடக்கும் பல்வேறு லாக்கப் டெத் முதற்கொண்டு வாய் திறக்கவில்லை என்பதில் இருந்தே உண்மையான சுதந்திர ஆட்சி எது என்பது இப்போது திரை துறையை சார்ந்த பாதிக்கும் மேற்பட்ட தரப்பிற்கு தெரியவந்துள்ளதாம்.
நீர் பூர்த்த நெருப்பாக இருக்கும் தமிழ் சினிமா துறையினர் விரைவில் தங்களுக்கு நடக்கும் அழுத்தம் குறித்து வெளியில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.