Tamilnadu

பிச்சைகாரன்னு சொல்லிட்டாரு H.ராஜா மீது புகார் கொடுத்த சுபவீ காவல் ஆணையர் சொன்ன பதிலால் அதிர்ச்சி !

hraja and subavee
hraja and subavee

ருத்ரதாண்டவம் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சியை பார்த்த பாஜக மூத்த தலைவர் எச் ராஜா அத்திரைப்படம் குறித்த கருத்துக்களை தெரிவித்தார், உண்மை எடுத்து கூறியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார் இதனிடையே பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த H ராஜா தினமும் பொய்களை பரப்ப கூடிய நபர் என சுப வீரபாண்டியனை கடுமையாக விமர்சனம் செய்தார்.


இது சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக மாறிய நிலையில் சுபவீ புகார் ஒன்றை அளித்துள்ளார் அதில் சமூக வலைத்தளங்களில் பிஜேபியைச் சேர்ந்த எச். ராஜா, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய காணொளி வெளியாகி உள்ளது. அதில் என்னைப் பெயர் சொல்லிக் குறிப்பிட்டு, ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தது தொடர்பாகப் பொய் பேசுவதால், சுப.வீரபாண்டியனின் மூளை குப்பைத் தொட்டியாக உள்ளது என்றும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை நிலையமான அறிவாலயத்தில் உட்கார்ந்துகொண்டு சுப.வீரபாண்டியன் பிச்சை எடுக்கிறான் என்றும் ஒருமையில் என்னை அவதூறாகப் பேசியுள்ளார்.

மேலும், பத்திரிகையாளர்கள் அனைவரையும் நோக்கி எல்லா பத்திரிகையாளர்களும் பிரஸ்ட்டிடியூட்ஸ் (Presstitutes) என்று கூறியுள்ளார். Presstitutes என்றால் பணத்திற்காக பொய்யான மற்றும் மோசமான செய்திகளை வெளியிடுபவர்கள் என்று பொருள் என்பதை அறிவோம். அந்தச் சொல்லின் மூலச் சொல்லாக, Prostitutes என்பது உள்ளது என்று அதற்கான விளக்கங்களை இணையங்களில் காணமுடிகிறது

இவ்வாறாகப் பத்திரிகையாளர்கள் அனைவரையும் கேவலப்படுத்தி, எச்.ராஜா பேசியுள்ளது கருஞ்சட்டைத் தமிழர் என்ற மின்னிதழ் ஆசிரியராக உள்ள எனக்கும் சேர்த்து சொல்லப்பட்டுள்ளது என்றே கருதுகிறேன்.எனவே மேற்கண்டவாறு என்னை அவதூறு செய்தும், எனது நற்பெயரைக் கெடுக்கும் விதமாக பொதுமக்கள் மத்தியில், அவப்பெயர் உண்டாக்கத் திட்டமிட்டு செயல்படும் H ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

காவல் ஆணையர் இல்லாத காரணத்தால் கூடுதல் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார் சுபவீ, அப்போது வீடியோ காட்சிகளை பார்த்த கூடுதல் ஆணையர், மேற்கொண்டு புகார் மனுவை படித்துள்ளார் அப்போது சுபவீ உடன் வந்தவர்கள் உடனடியாக ராஜாவை கைது செய்யுங்கள் மிகவும் எங்கள் தலைவரை தரக்குறைவாக பேசுகிறார் என தெரிவித்துள்ளனர்.

அப்போது கூடுதல் காவல் ஆணையர் முறையாக சட்ட ஆலோசனை பெற்று அதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார், சுபவீ கொடுத்த புகாரை போன்று பலர் மீது புகார் உள்ளது அப்படி என்றால் சிறை சாலையே பத்தாது, H ராஜா குறித்து சுந்தரவள்ளி உட்பட பலர் பேசியதை விடவா H ராஜா சுபவீ குறித்து பேசியுள்ளார், H ராஜாவை கைது செய்யவேண்டும் என்றால் வீரமணி தொடங்கி சுந்தரவள்ளி உட்பட 100 கணக்கானோர் கைது செய்யப்பட வேண்டும் அதனை மனதில் வைத்தே கூடுதல் ஆணையர் சுபவீயிடம் மலுப்பலான பதில் அளித்துள்ளார் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.

நமக்கு ஆதரவான ஆட்சி நடக்கும் போதே நம்மை இந்த கிழி கிழிக்கிறார்களே என கடும் கவலையில் இருக்கிறாராம் சுப. வீரபாண்டியன். சுபவீரபாண்டியன் பேட்டியளித்த வீடியோவை பார்க்க  click here