Tamilnadu

இந்துத்துவம் மட்டும்தான் உங்களுக்கு தெரியுமா வெளுத்து எடுத்த கவிஞர் தாமரை வாய் மூடி மவுனமான வீரமணி தரப்பு !

kavingar thamarai and veeramani
kavingar thamarai and veeramani

கவிஞர் தாமரை தியாகு,சுபவீ ஆகியோரின் இரட்டை வேடத்தை பல நாட்களாக அம்பலபடுத்தி வருகிறார், இந்நிலையில் கவிஞர் தாமரை சமீபத்தில் முக்கிய இரண்டு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார், இது இஸ்லாமிய அடிப்படை வாதிகளையும், ஒரு சார்பு நாத்திக வாதிகளையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.முதலில் ஈ.வே.ரா பிறந்தநாள் அன்று அவரது புகைப்படத்திற்கு பாலபிஷேகம் செய்யப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்தவர் குறிப்பிட்ட கருத்துக்கள் பின்வருமாறு பகுத்தறிவ எங்கே ? 'பெரியாரோடு திராவிடர் கழக வரலாறு முடிகிறது' என்று முன்னம் ஒரு பதிவில் எழுதியிருந்தேன். அதற்கு என்மேல் பாய்ந்து கொண்டு வந்தார்கள். 


 இதோ, இங்கே குழி தோண்டி, பாலும் ஊற்றியாயிற்றே !!!  இப்போதும் பாய்ந்து வருவார்கள் என்று தெரியும். இருந்தாலும் சொல்ல வேண்டியது கடமையல்லவா ??? பெரியாரியத்தை முடிக்க வெளியிலிருந்து யாரும் வரவேண்டாம், அவர்களே முடித்துக் கொள்வார்கள் என தெரிவித்துள்ளார். இதோடு அவர் தெரிவித்த மற்றொரு கருத்து பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது தலிபன்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாகக் கைப்பற்றிய பிறகு அதை வைத்து இங்கு நடக்கும் விவாதங்கள் இன்னும் கூடுதலாக வதை செய்கின்றன. தலிபன்களை வரவேற்றும் அவர்களின் நடவடிக்கைகளை ஆதரித்தும் எழுதுவதைப் பார்க்கப் பயங்கரமாக இருந்தாலும் வியப்பாக இல்லை. இவர்கள் இப்படித்தான் என்பது தெரிந்ததே !

மதப் பயங்கரவாதிகள் யார் ஆட்சியதிகாரத்துக்கு வந்தாலும் இதுதான் நடக்கும். அரசியலும் மதமும் ஒன்றிணையவே கூடாது என்பது இதற்காகத்தான் !.  இங்குள்ள இந்துத்துவவாதிகளைக் காயப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு, தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும் முட்டாள்தனத்தை மீண்டுமொரு முறை சிறப்பாகச் செய்து வருகிறார்கள்.

இங்குள்ள இசுலாமியர்களின் எதிர்ப்புக் குரல்கள் வலுவாக இல்லை. மாறாக, தலிபன் ஆதரவுக் குரல்களே ஓங்கி ஒலிக்கின்றன. இசுலாமியக் கட்சிகள், இயக்கங்களின் மௌனம், அவர்கள் இதை மனதிற்குள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. மத அடிப்படைவாதிகள் அங்கே ஆட்சிக்கு வரலாமென்றால், வரவேற்கிறார்கள் என்றால், இந்தியாவிலும் இந்துத்துவம் வரலாம்தானே ?? வரவேற்கத்தானே வேண்டும் ??

இதைச் சொன்னவுடனே சிலருக்கு எரியும். அதாவது 'மதவாதம்' என்றால் இங்குள்ள முற்போக்குவாதிகளுக்கு 'இந்துத்துவம்' மட்டுமே கண்ணுக்குத் தெரியும். இசுலாமிய அடிப்படைவாதம் என்னென்ன கொடூரங்கள் நிகழ்த்தும் என்று உலகின் பலபகுதிகளில் நிரூபிக்கப்பட்ட பிறகும் இன்னும் அதை வரவேற்பது நம் நாட்டில், அதுவும் முற்போக்குத் திலகங்கள் நிறைந்த தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கும். அமெரிக்காவை எதிர்க்கிறார்களாம் ஒருவர் எழுதுகிறார் : அமெரிக்காவைத் தலிபன்கள் ஓட ஓட  விரட்டினார்களாம், என்ன வீரம் என்ன வீரம் என்று !. அட முட்டாள்களா, அமெரிக்கா நினைத்தால் தலிபன்களை சிறிய கால அளவில் இல்லாமலாக்க முடியும்.

அவர்கள் அதை 'நினைக்கவில்லை', அவ்வளவுதான். ஏனென்றால் அவர்களுக்கு அதில் எந்த இலாபமும் இல்லை. செலவழித்தது போதும் என்று மூட்டை கட்டிக் கொண்டு கிளம்பி விட்டார்கள். நான் இதற்குள் நிகழும் அரசியலுக்குள் போக விரும்பவில்லை. அது வேறொரு தனிக் கட்டுரைக்கான சாரம் !. தோஹா பேச்சு வார்த்தை என்பது சும்மா டீ குடித்து விட்டு வருவதற்காக நிகழவில்லை என்பது   தெரியும்தானே !

நேற்றைய ஆப்கன் அரசு எவ்வளவு செயலற்ற அரசாக இருந்திருந்தாலும் சரி, அது மக்களுக்கான அரசு. கடந்த 20 ஆண்டுகளாக மக்கள் ஓரளவு சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது. எழுத்தறிவு - குறிப்பாகப் பெண்கள் முன்னேற்றம், பெண்குழந்தைகள் கல்வி, சுகாதாரத்துறை உள்ளிட்ட எல்லாவற்றிலும்  பல படிகள் முன்னோக்கி எடுத்து வைக்க முடிந்தது. இப்போது மீண்டும் ப.கு.க.தி கதையாக ஆரம்பித்த இடத்துக்கே வந்தாகி விட்டது. பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்வது யாருக்கு இன்பம்? யாருக்குத் துன்பம் ???

நம்மவர் ஒருவர் சொல்கிறார் : தலிபன்கள் எதையும் தாங்களாகச் செய்யவில்லை, குரான் என்ன சொல்கிறதோ அவற்றையே சிரமேற்கொண்டிருக்கிறார்கள் என்று !. ஆம், அதுதான் உண்மை. இசுலாமியப் பகுத்தறிவாளர்களைக் கேட்டால் அது உண்மைதான் என்றே கூறுவார்கள். மேலதிக  தகவல்களுக்கு அவர்களை அணுகுக, நான் அவற்றை விவாதிப்பதில்லை.

மதத்தை விட்டு வெளியே வாருங்கள், மதமாக யார் ஒன்று கூடினாலும் அதை நிராகரியுங்கள், மதம் மனிதனுக்குத் தேவையேயில்லை, அப்படியே தேவையென்றால் அவரவர் வீட்டளவில் வைத்துக் கொள்ள வேண்டும்.  யார் செய்த புண்ணியமோ, இந்தியப்பிரிவினையின் போது இந்தியப்பகுதி 'மதச்சார்பற்ற'தாக நிலைத்தது. மதவாத பாகிஸ்தான் இன்றுவரை மடவாத பாகிஸ்தானாகவே இருக்கிறது. அரசாங்கத்தை மதம் ஆட்டிப் படைக்குமானால் அங்கே மக்களும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள், நாடும் முன்னேறாது. 

பெரும்பான்மை இந்துக்களாக இருக்கும் இந்தியநாடு மதச்சார்பற்றதாக இருப்பதற்கு மகிழ்ச்சியடையுங்கள். இல்லையென்றால் தலிபன்களுக்கான நியாயம் இந்துத்துவர்களுக்கும் உண்டு என்றறிக  என குறிப்பிட்டுள்ளார்.கவிஞர் தாமரையின் கருத்துக்கள் போலி நாத்திகவாதிகளுக்கும் வீரமணி குழுவிற்கும் அவரது அடிவருடி சுபவீக்கும் உரைக்கும் படி அமைந்துள்ளது என கருத்துக்கள் பரவலாக பேசப்படுகிறது.