H.ராஜா கூறியது நடந்தே விட்டது, வம்பில் சிக்கிய சேகர்பாபு ! நீங்கள் நினைத்தும் பார்க்க முடியாத சம்பவம்!hraja
hraja

தமிழக கோவில் வருமானம் 10 லட்சம் கோடி கொள்ளை என H.ராஜா சில மாதங்களுக்கு முன்னர் பேசினார் தற்போது அது உண்மை என நிரூபிக்கும் அளவிற்கு தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்த தகவல்கள் பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது தமிழகத்தில் கோவில் நகைகளை உருக்குதல், கோவிலை வெள்ளி சனி ஞாயிறு பக்தர்களுக்கு தடை விதித்து மூடி வைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லை என்றால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என பாஜக மூத்த தலைவர் H.ராஜா எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தமிழக அரசு தெரிவித்துள்ள தகவல்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, தமிழகத்தில் கோவில் நகைகள் 1977ம் ஆண்டு முதலே உருக்கி தங்ககட்டிக்கலாக மாற்ற பட்டுள்ளன எனவும் அவற்றின் மூலம் வருமானம் வருவதாகவும் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது, இந்நிலையில் தங்க கட்டிக்கலாக மாற்றப்பட்ட தங்க நகைகள் எந்த கோவிலை சேர்ந்தது, இத்தனை ஆண்டுகள் இந்த பணத்தின் மூலம் என்ன நன்மையை கோவிலுக்கு அரசாங்கம் செய்துள்ளது என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து ராஜாஷங்கர் விஸ்வநாதன் எழுப்பிய கேள்விகள் அதிர்ச்சியடைய செய்துள்ளது, தமிழக கோவில்களிலே இதுவரை 500 டன் அதாவது 5 லட்சம் கிலோ தங்க நகைகளை உருக்கி வங்கிகளிலே டெப்பாசிட் செய்திருக்கிறார்கள். ஆனால் வட்டி வெறும் 11 கோடி தான் வருதாம். 

500 டன் என்றால் இரண்டரை லட்சம் கோடி மதிப்புடையது. ஒப்பீட்டுக்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவே 700 டன் தங்கத்தை தான் கையிருப்பு வைத்திருக்கிறது.  உலகத்திலே அதிக தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளிலே பத்தாவதாக இருக்கிறது இந்தியா . 11-ம் இடத்திலே இருக்கும் துருக்கி 583 டன், 12 ஆம் இடத்திலே இருக்கும் தைவான் 422 டன் தங்கத்தையும் வைத்திருக்கிறது. 

அதாவது உலக அளவிலே 12 ஆம் இடத்திலே தங்க கையிருப்பு வைத்திருக்கும் அமைப்பாக இந்து அறநிலையத்துறை இருக்கும். ஆனால் வட்டி எவ்வளவு வருகிறதாம்? 11 கோடி ரூபாய். ஆமாங்க 500 டன் தங்கத்துக்கு வெறூமனே 11 கோடி தான் வட்டி வருதாம். குறைந்த பட்சமே பத்தாயிரம் கோடி வரவேண்டும். 

வருடம் பத்தாயிரம் கோடியிலே எவ்வளவு கல்லூரிகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் கட்டலாம்.  ஆனால் இதையெல்லாம் கொள்ளையடித்து திரிகிறது இந்து அறநிலையத்துறை.  இதை நாளைக்கு தவறு 500 டன் அல்ல. வெறும் 500 கிலோ என சொல்லிவிடுவார்கள் என ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார், தமிழக அரசு நீதிலன்றத்தில் தெரிவித்த தகவல் உண்மை என்றால் தமிழகத்தை சேர்ந்த கோவில்களே உலகின் பணக்கார பட்டியலில் முதல் இடம் பிடிக்கும்.

இத்தனை சிறப்பு கொண்ட பல்வேறு வருமானங்களை இத்தனை ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட கட்சிகள் என்ன செய்தன மன்னர்கள் காலத்தில் கோவில்களுக்கு கொடுக்கப்பட்ட தங்க நகைகள் என்ன ஆனது என பல்வேறு கேள்விகள் இப்போது பொதுமக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது, பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக தமிழக அரசு இந்து கோவில்களில் தலையிடுவதை எதிர்த்து வரும் சூழலில்..,

தமிழக இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள தகவல்கள் பாஜகவின் வாதத்திற்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது, இன்று காலை அமைச்சர் என்பதையும் மறந்து சேகர் பாபு நாய் எதையோ பார்த்து குரைத்தால் பதில் அளிக்க முடியாது என மிகவும் ஆணவமாக பேசினார், ஆனால் மக்கள் மத்தியில் பல்வேறு தகவல்கள் வெளியாகி கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. H.ராஜா பேசிய வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்.

Share at :

Recent posts

View all posts

Reach out