தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட பாஜக சார்பு வேட்பாளருக்கு சொந்த குடும்பத்தினரே வாக்களிக்கவில்லை என தமிழக ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டுவரும் வரும் சூழலில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர் கார்த்தி விளக்கம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் உள்ளாட்சி தேர்தலில் நான் போட்டியிட்டது உண்மை நான் ஒரு வாக்கு வாங்கியதாக செய்திகள் வெளியிடும் ஊடகங்கள் எனது குடும்பத்தினர் கூட எனக்கு வாக்கு அளிக்கவில்லை என்ற செய்தியை பரப்புகின்றன இது போலியான தகவல்.எனது குடும்பத்தினர் உட்பட எனக்கு வாக்கு இருப்பது 4வது வார்டில்.,
நான் போட்டியிட்டது 9 -வது வார்டில் அப்படி இருக்கையில் எனக்கு எப்படி எனது குடும்பத்தினர் வாக்கு அளிக்கமுடியும், நான் பெற்ற வாக்குகள் குறித்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரினேன் ஆனால் அலுவலர்கள் மறுத்து விட்டார்கள்.
என் குடும்பத்தினர் கூட எனக்கு வாக்கு அளிக்கவில்லை என்ற போலி செய்தியை அரசியல் கட்சியை சார்ந்த ஊடகங்களை காட்டிலும் நடுநிலை ஊடகங்கள் என சொல்லி கொள்ளும் ஊடகங்கள்தான் அதிகம் பரப்புகின்றன, இது முழுக்க முழுக்க உள் நோக்கம் கொண்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வாக்கு பெற்றது உண்மை எனவும் எனது குடும்பத்தினர் கூட வாக்கு அளிக்கவில்லை என ஊடகங்கள் போலி செய்தியை பரப்புவதாக குறிப்பிட்டுள்ளார் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்தி. வேட்பாளர் கார்த்தி அளித்த பேட்டியை பார்க்க கிளிக் செய்யவும் .