பாஜக செய்தி தொடர்பாளர் குமரகுரு தனது சமூகவலைத்தள பக்கத்தில் தனியார் தொலைக்காட்சியின் குழந்தைகளுக்கனா நிகழ்ச்சியில் நடந்த சில சம்பவங்கள் மிகுந்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்
இதுகுறித்து அவர் குறிப்பிட்டது பு பின்வருமாறு :-கலைஞர் டிவியில் இமான் நடத்தும் குழந்தைகள் நிகழ்ச்சியில் ஒரு குழந்தையிடம் " மோடி நல்லவரா கெட்டவரா? என்று இமான் கேட்க அந்த 6 அல்லது 7 வயது குழந்தை " மோடி கெட்டவர்" என்று சொல்லுகிறது மேலும் " அவர் ஒழுங்கா வேலை செய்யறாரா இல்லையா? என்பதற்கு " செய்ய மாட்டேங்கிறாரு" என்று அந்த குழந்தை சொல்கிறது _( சொல்ல வைக்கப்பட்டிருக்கிறது).
கலைஞர் டிவி நிர்வாகமே! 1.5 லட்சம் தமிழர்களை இலங்கையில் கொன்ற போது கூட அப்போதைய பிரதமரை இப்படி கேட்கவில்லையே?. ஒரு பச்சை குழந்தையிடம் விஷத்தை கக்குவது ஒரு ஆளும் கட்சி நடத்தும் டிவிக்கு முறையா? இது போல் உலகத்தில் எந்த நாட்டிலாவது அந்த நாட்டின் பிரதமரை பற்றி ஒரு குழந்தையிடம் கேட்க முடியுமா?
மோடி எதிர்ப்பில் நடுநிலையானவர்கள் என்று சிலர் இருந்தால் சிந்தியுங்கள். சிந்தித்து நியாயம் சொல்லுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார், குழந்தைகளை கொண்டு இது பொன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் பொழுதுபோக்கு தொலைக்காட்சி உரிமம் பெற்றுவிட்டு வேண்டுமென்றே அரசியலை புகுத்துவது தவறு எனவும் சட்ட நிபுணர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் இமான் சொல்லுங்க அண்ணே சொல்லுங்க என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற நிலையில் வடிவேலு போன்று அரசியல் பேசி வாழ்க்கையை தொலைக்காமல் இருந்தால் சரி எனவும், அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டு பாஜகவினர் இருக்கமாட்டார்கள் எனவும் இமானுக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது.