Cinema

பிரதமர் மோடியை பாராட்டிய "வீரமணி" இளையராஜாவிற்கு கொதித்தவர்கள் எங்கே?

veeramani
veeramani

பிரதமர் மோடியின் ஆட்சியை பாராட்டிய இசைஞானி இளையராஜாவை சிலர் விமர்சனம் செய்து வரும் சூழலில் நெட்டிசன்கள் தற்போது வீரமணியில் இருந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி வரை தோண்டி எடுத்து விட்டனர், இது குறித்து சுந்தர் ராஜசோழன் குறிப்பிட்ட கருத்து பின்வருமாறு :-


பாபாசாஹேப் அம்பேத்கர் கொள்கைகளை பிரதமர் மோடி அமல்படுத்துகிறார் என்று சொன்ன இளையராஜாவை விமர்சிக்கும் திராவிடர்கள்,பெரியார் வழியில் வந்து நிற்கிறார் பிரதமர் என்று பேசிய கி.வீரமணியை பற்றி அப்போது வாய் திறக்காமல் இருந்தது ஏன்? அதுமட்டுமா!  2015 ல் விடுதலையின் முதல் பக்கத்திலேயே பிரதமர் மோடி - லாலு - முலாயமை பார்த்து தமிழ்நாட்டு தலைவர்கள் திருந்த வேண்டும்..வடநாட்டை பார்த்து திருந்த வேண்டும் தமிழர்கள் என அரைப்பக்கத்துக்கு எழுதினார் வீரமணி.


மோடியை யார்தான் புகழவில்லை? பாஜகவோடு கூட்டணியே வைத்திருந்தது திமுக, மோடி மிகவும் நல்லவர், குஜராத்தை வளர்க்க பாடுபட்டுள்ளார் என்றெல்லாம் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பேசினார் மோடி என்னோடுதான் நெருக்கமாக இருக்கிறார் எடப்பாடியை விட என்று இன்றைய தமிழக முதல்வர் ஸ்டாலினே தேர்தலுக்கு முன்பு தந்தி பேட்டியில் சொன்னார்.


ஆனால் இவர்கள் யாரையுமே விமர்சிக்காமல் இளையராஜா மீது மட்டுமே வன்மத்தை கக்குவதன் நோக்கமென்ன,அவரை கண்டிப்பதும்,மிரட்டுவதும் என்ன ரகம்?டெல்லியோடு திராவிடம் மட்டுமே இணக்கமாக இருக்க வேண்டுமென, தமிழக மக்களை பிரித்தாளும் யுக்திகளில் ஒன்றாக இதை பார்க்க வேண்டியதாக உள்ளது.

இளையராஜா இந்த நூற்றாண்டின் ஈடுஇணையற்ற தமிழ் முகம், இந்த பாரதிய கலாச்சாரத்தின் செழுமையான அடையாளம்  அவரை விமர்சிப்பதையும்,கேலி செய்வதையும் நிறுத்தவில்லை என்றால் மக்கள் தகுந்த பாடத்தை கற்றுத் தருவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் சுந்தர் ராஜசோழன். அப்புறம் என்னப்பா இளையராஜாவிற்கு சங்கி பட்டம் கொடுத்தது போன்று பெரியார் உடன் ஒப்பிட்ட வீரமணிக்கு ஒரு சங்கி பட்டம் கொடுக்கலாமா என பாஜகவினர் தற்போது திடீர்  இளையராஜா விமர்சகர்களை வெளுத்து எடுத்து வருகின்றனர்.