தமிழக தொலைக்காட்சி ஊடகங்கள் முற்றிலும் நடுநிலை தவறி செயல்படுகிறது என்பதை சுட்டிக்காட்டி பாஜக, அதிமுகவை சேர்ந்தவர்கள் விவாதத்தில் பங்கேற்பது இல்லை என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக ஆதரவாளர்களாக அறியப்படும் நபர்களை கொண்டு விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தில் 9 பேர் இறந்த நிலையில் அதுகுறித்து விவாதம் பிரபல ஊடகம் ஒன்றில் நடத்தப்பட்டது, இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் , வலதுசாரி சிந்தனையாளர் ஸ்ரீராம் , அரசியல் விமர்சகர் ஸ்ரீனிவாசன் , காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் .
விவாதத்தை கார்த்திகை செல்வன் தொகுத்து நெறியாளர் பணியை செய்தார் வழக்கம்போல் தமிழக ஊடகங்களின் ஒரு சார்பு மனநிலையே விவாதத்தில் வெளிப்பட்டது ,இந்த சூழலில் ஸ்ரீராம் என்பவர் எழுப்பிய கேள்விக்கு கார்த்திகை செல்வனால் பதில் அளிக்க முடியவில்லை , உத்திர பிரதேசத்தில் நடந்த 9 பேர் மரணம் குறித்து விவாதம் நடத்தும் எந்த ஊடகங்களும் ஏன் மேற்கு வங்கத்தில் மம்தா அரசாங்கத்தால் நடத்தப்பட்ட 12 பேர் மரணம் குறித்து வாய் திறக்கவில்லை .
அங்கு நடந்த சம்பவம் குறித்து இரு தரப்பும் வெவ்வேறு கருத்துக்கள் தெரிவிக்கிறார்கள் ,கார் மீது தாக்குதல் நடத்த நிலையில் தடுமாறி விபத்து ஏற்பட்டது ,ஆனால் டிரைவர் உட்பட மூன்று பாஜகவினரை அடித்தே கொன்றார்கள் இதை ஏன் ஊடகங்கள் சொல்லவில்லை ,நடந்தது கார் ஏற்றி நடைபெற்ற கொலைதான் என நீங்களே எப்படி முன் முடிவிற்கு வந்தீர்கள் ,அப்படி உங்கள் ஊடகத்திற்கு ஸ்பெஷல் தகவல் ஆதாரம் இருந்தால் காவல்துறையினரிடம் கொடுக்கலாம் என வெளுத்து எடுத்துவிட்டார் .
கார்த்திகை செல்வனோ கொலை எங்கு நடந்தாலும் அதனை ஆதரிக்க போவதில்லை தண்டிக்கப்படவேண்டும் என தெரிவித்தாரே தவிர கடைசி வரை மேற்கு வங்கத்தில் 12 பேர் கொல்லப்பட்டது குறித்து ஏன் நேர்பட பேசுவில் விவாதம் நடத்தவில்லை என்பதை சொல்லவேயில்லை . இதில் ஸ்ரீராம் கேள்வி எழுப்பிய பொது அவரது பேச்சு மக்களுக்கு முழுவதும் கேட்காமல் ஆடியோ சத்தம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது . வீடியோவை பார்க்க கிளிக்