ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புலிவலம் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்டு, வரும் 9 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கிறிஸ்தவராக மதம் மாறிய ஒருவர் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட பதவிக்கு, இந்து ஆதி திராவிடர் என போலியாக சான்றிதழ் பெற்று போட்டியிடுவதாக கூறி,
அமெரிக்காவில் வசித்து வரும் புலிவலம் கிராமத்தை சேர்ந்த பாதிரியார் சத்தியசீலன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், புலிவலத்தில் உள்ள தன்னுடைய வீட்டு முகவரியை பயன்படுத்தி ஊருக்கு சம்மந்தமே இல்லாத பிரேம்நாத் என்பவர் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாகக் கூறியுள்ளார்.
சோளிங்கரில் இனிப்பு கடை நடத்தும் சென்னையை சேர்ந்த கிறிஸ்தவவரான பிரேம்நாத், தன் வீட்டு முகவரியை பயன்படுத்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும்,அவர் கிறிஸ்தவராக மதம் மாறி தற்போது தென்னிந்திய திருச்சபையில் உறுப்பினராக உள்ள நிலையில், இந்து ஆதிதிராவிடர் என சட்டத்திற்கு புறம்பாக சாதி சான்றிதழ் பெற்று போட்டியிடுவதால்,அவரது வேட்புமனுவை நிராகரித்து உத்தரவிட வேண்டுமென வழக்கு தொடுத்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், சத்திகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே வேட்புமனு தாக்கல் முடிவடைந்து வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாகவும் இதனால் நீதிமன்றம் தலையிட முடியாது என தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது தேர்தல் நடைமுறை துவங்கிய பின் அதில் தலையிட முடியாது என தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் முடிந்த பின் மனுதாரர் உரிய அமைப்பை அணுகலாம் எனவும், வழக்கின் தன்மையை ஆராய்ந்து நீதிமன்றம் உறுதி படுத்தும் என தெரிவித்துள்ளனர், அதாவது உண்மையில் கிறிஸ்தவராக மதம் மாறிய நபர் தேர்தலில் போட்டியிட்டு ஒரு வேலை வெற்றி பெற்றால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட சட்டத்தில் இடம் உள்ளதால் தற்போது போட்டியிட்ட நபர் அச்சத்தில் உள்ளார்.
அத்துடன் போட்டியிட்ட பிரேம்நாத் நானஸ்தானம் பெற்றது முதல் கிறிஸ்தவறாக வாழ்ந்து வருவதுவரை அனைத்து ஆதாரங்களையும் பாதிரியார் ஒருவரே அளித்துள்ளதால் போட்டியிட்ட பிரேம்னாத் தரப்பு அதிர்ந்து போயுள்ளது சமீபத்தில் வெளியான ருத்ரதாண்டவம் திரைப்படம் மதம் மாறிய பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களது பட்டியல் சமூகம் என்ற அந்தஸ்தை இழப்பதாக தரவுகளை மையமாக கொண்டு படத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
ஓ அதுதான் திருமாவளவன் போன்றோர் தாங்கள் இந்துக்கள் இல்லை என சொல்கிறார்களே தவிர வேறுமதத்திற்கு அதிகார பூர்வமாக மாறவில்லையா? நீதிமன்றம் தேர்தல் நடைமுறை தொடங்கிவிட்டதால் மட்டுமே தற்போது தலையிட வில்லை என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.