Tamilnadu

என்ன நினச்சிட்டு இருக்கீங்க ரைட் லெப்ட் வாங்கிய நீதிபதி மிரண்டுபோய் உத்தரவு போட்ட ஸ்டாலின் !

mks and high court
mks and high court

முதலமைச்சருக்கான பாதுகாப்பு கான்வாய் 25-ல் இருந்து ஆறாக குறைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருப்பதாகவும் இனி பொதுமக்களுக்கு இடையூறு சாலையில் பொது மக்களை காக்க வைக்காமல் முதல்வர் வாகனம் செல்லும் எனவும் நேற்று தமிழக முன்னணி ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டன இதற்க்கு பல தரப்பிலும் ஆதரவு வந்த வண்ணம் இருக்கும் சூழலில் இது எதனால் ஏற்பட்டது என்ற தகவலை பெரும்பாலான ஊடகங்கள்  சொல்லவில்லை .


அதுகுறித்த தகவலை தருகிறது Tnnews24 , கடந்த வாரம் நீதிபதியைப் பணி செய்யவிடாமல் 25 நிமிடம் தடுத்து வைத்த காவல்துறைக்குக் கடும் கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு அளிக்கும் அதே மரியாதையை நீதிபதிகளுக்கும் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது ,சிவாஜி கணேசனின் 96-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, சென்னை அடையாறு டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். 

இதற்காக, சாலைகளில் இரும்புத் தடுப்புகளை அமைத்து, போக்குவரத்தை நிறுத்தி வைத்தனர். இதனால், அந்தச் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலையில் பணிக்குச் செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.இதேபோன்று, அந்தச் சாலை வழியாக உயர் நீதிமன்றம் வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வாகனத்தையும் காவல்துறையினர் தடுத்துள்ளனர்.

இதனால் உயர் நீதிமன்றத்துக்கு 25 நிமிடம் தாமதமாக வந்ததால், தனது பணி பாதிக்கப்பட்டுள்ளதால் இதுகுறித்து உள்துறைச் செயலாளர் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.அதன்படி, காணொலிக் காட்சி மூலம் ஆஜாரான உள்துறைச் செயலாளர் பிரபாகரிடம், எதனடிப்படையில் 25 நிமிடங்கள் தடுத்து நிறுத்தினீர்கள்? பொது ஊழியரான, நீதிபதியான என்னை பணி செய்ய விடாமல் தடுத்தது நீதிமன்ற அவமதிப்பு என, நீதிபதி சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.

நடைபெற்ற நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்த உள்துறைச் செயலாளர்,சென்னை மாநகரக் காவல் ஆணையரை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறாது என்றும் உறுதியளித்தார்.இதையடுத்து, முதல்வர், அமைச்சர்கள் நிகழ்ச்சிக்குப் போகும்போது, இதுபோல் காவல்துறையினர் தடுத்து நிறுத்துவார்களா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, 

முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அதே மரியாதையை நீதிபதிகளுக்கும் அளிக்க வேண்டும் என  வெளுத்து எடுத்துவிட்டார் ,இதுபோன்ற மீண்டும் ஒருமுறை நடந்தால் நடப்பது என்ன என்பது உங்களுக்கு புரியும் என கூறியவர் இந்த நிகழ்வு நீதிமன்ற அவமதிப்பாக இருந்தாலும் எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காது என்று நம்புவதாக நினைத்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து நீதிபதி தெரிவித்த கருத்து குறித்தும் முழு தகவலையும் உள்துறை செயலாளர் முதலமைச்சர் ஸ்டாலினின் தனி செயலாளர் உடன் தெரிவித்து இருக்கிறார் , 

இதுகுறித்து ஆலோசனை செய்த ஸ்டாலின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவும் அதற்கு பதிலாக மாற்று வழியை தேர்வு செய்யவும் முக்கியமாக டிராபிக் அதிகமாக காணப்படும் அலுவலக நேரத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நேரத்தை குறைக்கவும்  அறிவுறுத்தி இருக்கிறார் ,ஏற்கனவே மத்திய அரசுடன் நமக்கு நல்ல உறவு இல்லை இந்த நேரத்தில் நீதிமன்றத்தை பகைத்து கொள்வது சரியாக இருக்காது என முடிவு எடுத்து இருக்கிறார் ஸ்டாலின் .

இதுதான் நடந்த உண்மை அதற்குள் தமிழக ஊடகங்கள்  முற்பகுதியை கூறாமல் பிற்பகுதியை மட்டும் தெரிவித்து வழக்கம் போல் தங்கள் ஆதரவு நிலைப்பாட்டை நிலை நிறுத்தியுள்ளன .