தமிழ் சினிமா என்பது ஒரு சிலர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொண்டு குறிப்பிட்ட கதை களத்தை மட்டுமே தேர்வு செய்து தமிழக மக்கள் மத்தியில் திணித்து வந்தனர், அதை மீறி வெளியாகும் படங்களை சில ஊடகங்களை கையில் வைத்து கொண்டு விமர்சனம் என்ற பெயரில் கடுமையாக எதிர்ப்பை கொடுத்து வந்தனர்.
இந்த சூழலில் சமீபத்தில் தமிழ் சினிமா ட்ரெண்ட் மாற தொடங்கி இருக்கிறது குறிப்பாக தமிழர்களின் வரலாறு, உணமையான பிரச்சனைகளை பேச கூடிய திரைப்படங்கள் வெளியாகி வருவதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றியை பெற்று வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் சோழர் வரலாற்றை பேசியது.
இது வெற்றியை குவித்து வரும் சூழலில் திரைப்பட இயக்குனர் வெற்றி மாறன், இராஜா இராஜா சோழனை சிலர் இந்துவாக மாற்ற முயல்கிறார்கள் என பேச கடும் சர்ச்சை வெடித்தது, இந்த சூழலில் தமிழ் சினிமா இனி தனது வரலாற்று கதைகளை அதிகம் கூறும் என அப்போது சினிமா துறையில் இருந்தே பதில்கள் வந்தன.
தற்போது அதனை நிரூபிக்கும் விதமாக நந்தி வர்மன் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது, சமீபத்தில் வெளியான அந்த படத்தின் டீசர் இணையத்தில் மக்கள் மனதை கவர்ந்துள்ளது, ஒருத்தனுடைய வரலாற அழிக்கணும்னா முதல்ல அவனுடைய அடையாளத்த அழிக்கணும் என இடம்பெற்றுள்ள வார்த்தைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஏற்கனவே சோழர்கள் கதை வெளியாகி வெற்றிநடை போட்டு கொண்டு இருக்கும் சூழலில், இப்போது பல்லவர்கள் அடையாளத்தை மெய்ப்பிக்கும் விதமாக நந்தி வர்மன் எனும் திரைப்படம் வெளியாகி இருப்பதும், அது தற்போதைய சினிமா துறைக்கு ஏற்றவாறு திரில்லர் ஜானரில் கொடுத்து இருப்பதும்..,
வரலாற்றை மாற்ற பலநாட்களாக சினிமா துறையை கையில் வைத்து இருந்த ஒரு தரப்பை கதற செய்து இருக்கிறதாம், இனி தொடர்ச்சியாக நந்தி வர்மன் போன்ற பல திரைப்படங்கள் வெளியாகும் என தமிழ் சினிமா வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.
நந்திவர்மன் திரைப்படம் குறித்து அதன் இயக்குனர் பெருமாள் வரதன் நம்மிடம் குறிப்பிட்டதாவது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நந்திவர்மன் சூழ்ச்சியினால் கொலை செய்யப்படுகிறார். அப்போது நடக்கும் போரில் அவர் வாழ்ந்த ஊரே பூமிக்கு அடியில் புதைந்து விடுகிறது.
அந்த சம்பவத்தில் இருந்து, அந்த ஊரில் 6 மணிக்கு மேல் பல்வேறு அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதாக ஒரு நம்பிக்கை இருந்து வருவதால், தற்போதைய காலக்கட்டத்திலும் அந்த ஊரில் வசிக்கும் மக்கள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள். இதை மையமாக வைத்தும் பல்லவர்கள் வரலாற்றை சொல்லும் விதமாகவும் கதை களம் உருவாகி இருப்பதாக குறிப்பிட்டார்.
மொத்தத்தில் சிவனை விமர்சனம் செய்து திரைப்படம் வந்த காலங்கள் மாறி தற்போது சிவனை மையமாக கொண்டும் தமிழ் மன்னர்களின் வரலாறுகளை மையமாக கொண்டும் தமிழ் திரைப்படங்கள் வெளியாவது தமிழ் மீது பற்று கொண்ட தலைமுறையை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இந்துக்கள் என்ற ஒன்றே இல்லை சைவம் வைணவம் என சிலர் கூறி கொண்டு இருக்க சோழர் வரலாற்றை தொடர்ந்து பல்லவர் குறித்த திரைப்படமும் வெளிவர இருப்பதும் இப்போது வரலாற்று அழிப்பு போராளிகளை அலற செய்துள்ளதாம்.