தமிழகம் முழுவதும் நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் தம்பதியினர் தங்களுக்கு குழந்தைகள் பிறந்து இருப்பதாக வெளியிட்ட செய்தி கடும் அதிர்வலைகளை உண்டாக்கியது அதை தொடர்ந்து விவாதங்களும் எழுந்தன இந்த சூழலில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தாம்பதியினரிடம் விசாரணை நடத்த விசாரணை அமைப்பு ஒன்றையும் மாநில அரசு அமைத்தது கடும் சர்ச்சையை உண்டாக்கியது.
இது குறித்து பலரும் விமர்சனம் செய்ய அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் உதயநிதி நட்பு இருந்தால் விருந்து கிடைக்குமா? யாருடைய வரிப்பணம் எனவும் கடுமையாக கேள்வி எழுப்பி இருக்கிறார் இது குறித்து அவர் தெரிவித்ததாவது, சாமானியர் எந்த தவறும் செய்யவில்லை என்றாலும் விசாரனை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அடித்து உதைத்து சில சமயங்களில் லாக்கப் மரணம் கூட நிகழ்கிறது.
அதுவே நயன்தாரா-விக்னேஷ் சிவனாக இருந்தால் விசாரிக்க குழு அமைத்து மக்கள் வரிப் பணத்தில் அந்த குழுவிற்கான செலவுகளை செய்து அனைவரும் மறந்து போகும்வரை குழு அமைதியாக விசாரிக்கும்.
என்ன நியாயம் இது? ஏன் அவர்கள் நேரில் வந்து விளக்கம் தர வேண்டுமென கூற சட்டத்தில் இடம் இல்லையா? உதயநிதி அவர்களின் நட்பாக இருந்தால் குழு அமைத்து விருந்தளித்து விசாரனை நடைபெறும் எனவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் ராஜேஸ்வரி பிரியா.
இது தவிர்த்து சமீபத்தில் நடந்த சத்யா கொலை குறித்தும் ராஜேஸ்வரி பிரியா தெரிவித்த கருத்தும் முக்கியத்துவம் பெற்றுள்ளது அதில், பெண் காதலிக்கவில்லை என்றால் கொலை செய்வதுதான் முடிவா? அட கொடூர மனம் கொண்ட அரக்கனே நீ விழுந்து சாக வேண்டியதுதானடா?
எத்தனை கனவுகளோடு பெற்றோர்கள் பெண் குழந்தைகளை வளர்க்கிறார்கள் என்று தெரியுமாடா உனக்கு?காதலித்தவன் எவனும் தான் காதலித்த பெண்ணை கொலை செய்ய மாட்டான்.உன்னை போன்ற ஈனப்பிறவியால் ஒரு குடும்பமே சிதறிச் சின்னாபின்னமாகிவிட்டது.
உனக்கென்ன பணமிருந்தால் தண்டணைகளிலிருந்து தப்பித்து நிம்மதியாக வாழ்வாய். தண்டனைகள் கடுமையானால் இது போன்ற கொடிய மிருகங்கள் உருவாகாமல் இருக்கும்.அதிகாரத்திலும் உயர் பதவியிலும் உள்ள பலர் பெண்கள் விசயத்தில் பலவீனமானவர்களாக இருப்பதனால் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவது குறைவாக உள்ளது.எப்போது மாறும்?எப்படி மாறும் எனவும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.