பத்திரிகையாளர் பனிமலர் பன்னீர்செல்வம் தனது பத்திரிகை துறையை கடந்த, பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார், பலரது பொருள்களுக்கு இலவச விளம்பரம் கொடுத்து வருகிறார் இந்நிலையில் கசப்பான சம்பவம் குறித்து பனிமலர் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்த தகவல் பின்வருமாறு :- கடை திறப்புக்கு கேட்டுட்டு, ஒரு நைட்டுக்கு இவன் எவ்ளோ வேணாலும் தரானாம். தொழில் முனைவோருக்கு விளம்பரம் பண்ணும்போது 1 மணி நேர வீடியோல 10 நிமிசம் அநாவிசயமா யாரயும் தொந்தரவு பண்ணாதீங்கனு சொல்றேன்.அப்பவும் இது நடந்துட்டேதான் இருக்கு. இன்னைக்கு ஒரு அக்காட்ட பேசும்போது லைவ் முடுஞ்சதும் வீடியோ கால் வந்துச்சுமா நிர்வாணமா நிக்குறான்னு லட்ரலி அழுகுறாங்க. எவ்ளோ கேவலம் இதெல்லாம்.
பெண்கள் வேலை செய்யலனா செய்யலனு சொல்றோம் செய்யும்போது இப்டி தொந்தரவு செஞ்சா அவுங்களும் என்னதான் செய்வங்க. இதும் இந்திகாரனுக நிறைய பேர் இப்டி திரியுறானுக. ஆண்கள் இது மாதிரி செய்யும்போது நம் வீட்டு பெண்கள்கிட்டயும் யாரோ இப்டி நடந்துக்குவாங்கனு நினைவிருக்கட்டும்.பெண்களைக்கு இதுக்கெல்லாம் பயந்து நாம வேலை செய்யாம இருக்கமுடியாது, தைரியமா டீல் பண்ணுங்க.
அது மாதிரி பண்ற பெரும்பாலானவுங்க தன்நம்பிக்கை இல்லாத பயந்தாகோலிகதான் நீங்க சத்தமா பேசுனாலே ஓடிருவானுக என குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வரும் சூழலில் தமிழக அரசு, இது போன்ற ஆன்லைன் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.,
என்ற வலியுறுத்தல் அதிகரித்து வருகிறது, ஆமாம் சாட் செய்தது தமிழ் மொழியில் செய்துள்ளான் இதிலும் இந்தி காரனை இழுத்து அரசியல் செய்ய வேண்டுமா? தவறு செய்தவன் யார் என்று நேரடியாக குறிப்பிட்டால் மட்டுமே தவறுகள் ஒழியும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.