தமிழகத்தில் அரசியல் விமர்சனத்தை தொழிலாக செய்பவர்கள் பலர் உண்டு, சிலர் வெவ்வேறு யூடுப் சேனல்களில் கலந்து கொண்டு ஓவ்வொரு சேனலிலும் தங்களது கருத்துக்களை பதிவு செய்வர், இதற்கென சில இணைய ஊடக நிறுவனங்கள் தனியாக ஓவ்வொரு நபர்களுக்கும் குறிப்பிட்ட தொகையை கொடுக்கும்.
சிலர் பணம் ஏதும் இன்றி தங்களது கொள்கைகளை எடுத்து கூறவும் கலந்து கொள்வார்கள் இந்த வகையில் மேற்குறிப்பிட்ட ஒரு வகையை சேர்ந்தவர் சவுக்கு சங்கர், முழு நேரமும் ஏதாவது ஒரு யூடுப் சேனலில் அமர்ந்து பல்வேறு விவரங்களை கூறுவார், இவர் பேசும் கருத்து உண்மையா? அதற்கான ஆதாரம் என்ன என்று எதையும் கூறாமல் தனது பங்கிற்கு அடித்து விடுவார்.
அப்படி ஒன்றுதான் சமீபத்தில் ஒரு யூடுப் சேனலில் கலந்துகொண்டு அண்ணாமலை மற்றும் செந்தில்பாலாஜி இருவரை பற்றியும் சவுக்கு சங்கர் சொன்ன செய்தி, செந்தில்பாலாஜியை BGR எனர்ஜி விவகாரத்தில் அண்ணாமலை விமர்சனம் செய்து ஸ்டாலினுடன் செந்தில் பாலாஜியை நெருக்கம் ஆக்கிவிட்டாராம்.
இதற்கு கைமாறாக செந்தில்பாலாஜி வருகின்ற மக்களவை தேர்தலில் அண்ணாமலைக்கு கரூர் தொகுதியில் வெற்றி பெற வேலை செய்வார் எனவும் கரூரில் ஜோதிமணியை எதிர்த்து அண்ணாமலை நிற்பாராம் அவருக்கு செந்தில் பாலாஜி உதவுவார் என சவுக்கு சங்கர் தெரிவித்து இருக்கிறார், இதனை பார்த்த பலரும் சிரிப்பாய் சிரித்து வருகின்றனர்.
சூரிய வம்சம் படத்தில் கூட ஒரு பாடலில் தான் பணக்காரராக மாறுவர் சின்ராசு ஆனால் சவுக்கு சங்கரின் பேட்டியை பார்த்தால் ஒரு மனிதன் முழு பைத்தியமாக மாற அதிக வாய்ப்புகள் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சவுக்கு சங்கர் அடித்து விடும் கதைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் விரைவில் ஏதேனும் சினிமா ஒன்றில் சவுக்கு சங்கர் காதசிரியராக நடித்தாலும் ஆச்சர்யம் இல்லை என்று கிண்டலடித்து வருகின்றனர் சவுக்கு சங்கரின் பழைய வரலாறு அறிந்தவர்கள்.