Cinema

இவரே "வைப்பாராம்" இவரே எடுப்பாராம் ரகுவரன் பாணியில் சூர்யாவிற்கு எதிர்ப்பை பதிவு செய்த தியேட்டர் சங்க தலைவர்

actor surya
actor surya

நடிகர் சூர்யா தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியாகி இருக்க கூடிய திரைப்படம் ஜெய்பீம், சூரரை போற்று, உடன்பிறப்பு இன்னும் சூர்யா குடும்பம் திரைப்பட வரிசையில் தற்போது ஜெய்பீம் திரைப்படமும் தியேட்டரில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.


இந்தசூழலில் சூர்யாவின் திரைப்படத்தை அவரது ரசிகர் மன்றத்தினர்  சட்டத்திற்கு புறம்பாக தனியார் ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் நடிகர் சூர்யாவிற்கு தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளேக்ஸ் உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சப்பிரமணியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா, 'நீட்' மற்றும் வேளாண் சட்டங் களை எதிர்த்து குரல் கொடுக்கிறார். தொடர்ந்து, சட்டவிரோதமான செயல் களை தடுப்பதில் முனைப்பு கொண்டவராக தன்னை காட்டிக் கொள்கிறார். ஆனால், தன் ரசிகர்கள் இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்காமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.'ஓடிடி' படங்களை பொது வெளியில் திரையிட அனுமதியில்லை.அவ்வாறு திரையிட்டாலும், அரசு அனுமதி பெற வேண்டும். இதை சூர்யா கண்டிக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

அவர், மனசாட்சி படி நடந்து கொள்ள வேண்டும். இது போன்ற செயல்களால் தியேட்டர்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், தமிழக முதல்வருக்கு புகார் அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து சூர்யா அவரது மனைவி ஜோதிகா ஆகியோர் திரைப்படங்களை ஓடிடி தளத்தில் மட்டுமே வெளியிட்டு வருவதால் கடும் எதிர்ப்பை திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்து வருகின்றனர்.

சூர்யா தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் இனி ஆயுசுக்கும் ஓடிடி தளத்தில் மட்டுமே திரைப்படத்தை வெளியிட வேண்டிய சூழல் உண்டாகும் என பல திரையரங்கு உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. சட்ட விரோத செயல்களை தடுப்பவறாக தன்னை காட்டி கொள்ளும் சூர்யா, தனது ரசிகர்களின் சட்டவிரோத செயல்களை கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்கிறார் என திருப்பூர் சுப்பிரமணியம் குறிப்பிட்டு இருப்பது.

ரகுவரன் திரைப்படம் ஒன்றில் இவரே குண்டு வைப்பாராம் இவரே எடுப்பாராம் என சினிமா வசனத்தை நினைவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது என பலரும் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.