Cinema

திரைப்படம் பாதியில் நிறுத்தம் அடுத்தடுத்து அரங்கேறிய மெகா சம்பவம் தமிழகத்திலா இப்படி?!

rudrathandavam
rudrathandavam

கடந்த வெள்ளி அன்று திரைக்கு வந்த ருத்ரதாண்டவம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மிக பெரிய அளவில் வெற்றி வாகை சூடியுள்ளது, சில பத்திரிகை மற்றும் ஊடகங்கள் திட்டமிட்டு படத்திற்கு எதிர்மறை விமர்சனம் செய்தாலும் திரையரக்குகள் முழுவதும் நிறைந்து காண்டப்படுகின்றன.

குறிப்பாக குடும்பம் குடும்பமாக பெண்கள் வயதானவர்கள், இளைஞர்கள் என திரைப்படத்தை காண வருகை தந்த பலரால் திரையரங்க உரிமையாளர்கள் இரு மடங்கு சந்தோசத்துடன் உள்ளனர், தமிழ் சினிமாவில் இதுவரை இந்து மதத்தை கிண்டல் செய்த படங்களே அதிகம் வந்த நிலையில் முதல் முறையாக உண்மையை கூறிய திரைப்படம் இது என பலர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இந்த சூழலில் சென்னையில் உள்ள பிரபல மல்டி பிளெக்ஸ் திரையரங்கில் ருத்ரதாண்டவம் திரைப்படம் திரையிட பட்டது, இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி கொண்டு இருந்த நேரத்தில் படம் பாதியில் நிறுத்தப்பட்டது, தொழில்நுட்ப கோளாறு என திரையரங்கு நிர்வாகம் சார்பில் விளக்கம் கொடுத்த நேரத்திலும் ரசிகர்கள் ஏற்க தயாராக இல்லை.

இதே தியேட்டரில் பல திரைப்படங்களை பார்த்து இருக்கிறோம், அப்போதெல்லாம் ஆகாத தொழில் நுட்ப கோளாறு இந்த படத்திற்கு மட்டும் ஏன் வந்தது என பெண் ஒருவர் கேள்வி எழுப்பினார், நல்ல கருத்துக்கள் இந்த படத்தில் உள்ளது அதை பார்க்க கூடாது என வேண்டுமென்றே சதி செய்கிறீர்கள் அது உங்களால் முடியாது எனவும் திரைப்படத்தை பார்க்க வந்த பெண் ஒருவர் பேசுகிறார் அதற்கு பலரும் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர்.

இதன் மூலம் ருத்ர தாண்டவம் திரைப்படம் தமிழ் சினிமாவில் குறிப்பாக பல பேரின் பல நாள் கேள்விகளை வெளி உலகிற்கு கொண்டுவந்துள்ளது என்றே தெரிகிறது, இதற்கு முன்னர் இது போன்ற ஒரு திரைப்படத்தை குடும்ப பெண்கள் அதிகம் கொண்டாடியதாக சமீப காலத்தில் பார்க்க முடியவில்லை.
தமிழ் சினிமாவில் இனி இந்து மதத்தை இழிவு படுத்தியோ அல்லது கிண்டல் செய்தோ இனி திரைப்படங்கள் வந்தால் அதற்கு பதிலடியாக வெளியாகும் படங்கள் பெரும் வெற்றி பெரும் என்பதே  ருத்ரதாண்டாவத்தின் வெற்றியாக பார்க்க படுகிறது.பெண் கேள்வி எழுப்பிய வீடியோ பார்க்க கிளிக்