Cinema

மாநாடு பட ஓப்பனிங் காட்சியே இதுதான்! நடிகர் பிரேம்ஜி வெளியிட்ட மாஸ் வீடியோ!

simbu and premji
simbu and premji

நடிகர் சிம்பு நடித்த மாநாடு படம் இன்று தியேட்டரில் ரிலீஸ் ஆகி இருக்கின்றது. இந்த படத்துக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து இருக்கின்றனர்.


ஏற்கனவே தீபாவளிக்கு வர வேண்டிய படம் தள்ளி சென்று இன்று ரிலீஸாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் நேற்றிரவு திடீரென திட்டமிட்டபடி மாநாடு படம் ரிலீஸ் ஆகாது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தா.ர் அதனை பார்த்த உடன் சிம்பு ரசிகர்கள் உற்சாகம் இழந்தனர். இப்படியான ஒரு நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியான பிரேம்ஜி இன்று அதிகாலை படத்திற்காக காத்திருப்பதாக நேரத்தை பதிவிட்டு வெயிட்டிங் என பதிவு செய்திருந்தார். இதனை பார்த்த பலரும், நாங்களும் படத்துக்காக தான் காத்திருக்கிறோம் என பதில் அளித்து வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் மாநாடு படத்தின் ஓபனிங் காட்சி லீக் ஆகிவிட்டது என குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார் பிரேம்ஜி. அதாவது எந்த ஒரு படமாக இருந்தாலும் ஓப்பனிங்கில் "புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் உயிரை கொல்லும் மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்" என்ற வரிகள் இருக்கும் அந்த வரிகளையே படத்தின் ஓபன் சீன் லீக் ஆகிவிட்டது என குறிப்பிட்டு ஒரு ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் பேசுவது போன்ற ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறார் பிரேம்ஜி.


ஓபனிங் சீன் என்ற உடனே அனைவரும் உற்சாகமாக அது என்ன காட்சியாக இருக்கும் என ஆர்வமாக வீடியோ பிளே செய்த பின்னர் தான் பிரேம் ஜி காமெடி செய்துள்ளார் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து நெட்டிசன்கள் ஒரு பக்கம் நீங்க சரியா காமெடி பண்றீங்க என்றும் நேரங்காலம் தெரியாம காமெடி பண்றீங்க என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.