தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக சினிமாவில் கலக்கி வரும் இவர் தற்போது சினிமா துறையை சேர்ந்த பலரும் விமர்சனத்தை அடுக்கடுக்காக வைத்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் இமானை தொடர்ந்து நாய்ச்சுவை நடிகர் ஒருவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருச்சியை கல்லுரி பயின்ற சிவகார்த்திகேயன் தனக்கு உள்ள மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். விஜய் டிவியில் இவருடன் பணியாற்றியவர் இயக்குனர் நெல்சன் விஜி டிவியில் கலக்கி வந்த இவர் வெள்ளி திரையில் மெரினா படம் மூலம் சினிமாவிற்கு வந்தார். அப்போது நகைச்சுவை நடிகராக அறிமுகமான இவர் தொடர்ந்து சினிமாவில் கால் பதித்து வந்தார். தொலைக்காட்சியில் தனது திறமையை கண்டு பல முன்னணி நடிகர்களும் சிவகார்த்திகேயனுக்கு தனது படத்தில் துணை நாயகனாக அறிமுகபடுத்தி கொண்டுள்ளனர். அப்படி தான் சிவகார்த்திகேயனை நடிகர் தனுஷ் மூன்று படத்தில் நடிக்க வைத்தார். ஆனால், வளர்த்த கிடா நெஞ்சில் பாய்ந்தது போல் பொங்கலுக்கு கேப்டன் மில்லருக்கு போட்டியாக அயலான் படம் வெளியாகிள்ளது என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.
சிவகார்த்திகேயன் சினிமாவில் வளர்ந்து கொண்டிருக்கும் போது, இமான் திடீரென்று தனது முதல் திருமண வாழ்க்கையில் சிவகார்த்திகேயன் விளையாடிவிட்டதாக குற்றாச்சாட்டு வைத்தார். அப்போது, இமான் இப்படி பேசுனது சம்பந்தமாக சிவகார்த்திகேயன் எந்த வித விளக்கமும் கொடுக்கவில்லை. அதன் தொடர்சியாக மீண்டும் ஒரு குற்றச்சாட்டு வைத்துள்ளார் பிரபல நடிகர் ஒருவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல், ஜோடி நம்பர் 1 ஷோ ஆகியவை மூலம் பிரபலமானவர் பாண்டி. சாட்டை, அங்காடி தெரு, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிளாக் பாண்டி இவர் தான் தபோது சிவகார்த்திகேயன் பற்றி தெரிவித்துள்ளார். இந்து மேலும் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயனை சந்தித்துள்ளார் பிளாக் பாண்டி. அப்போது விஜய் டிவியில் அவருடன் பழகிய அதே உரிமையில், "சிவா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றுள்ளார். ஆனால் பாண்டியை சிவகார்த்திகேயன் கண்டுகொள்ளாமல் போனதாகவும், பின்னர் அவரது மேனேஜரிடம் கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்பியதாகவும் பாண்டி கூறியுள்ளார். இது தனக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது, நான் அவரிடம் எதாவது நடிக்க வாய்ப்பு இருந்தால் கேட்கலாம் என நினைத்தேன்.
விஜய் டிவியில் ஒன்றாக வேலை பார்த்துள்ளதால் அவரது படங்களில் நடிக்க சிவா சான்ஸ் கொடுப்பார் என்ற ஆசையில் தான் பேச நினைத்தேன். எனக்கு கை, கால் எல்லாம் நல்லா தான் இருக்கு... அப்படி இருக்கும் போது எனக்கு பணம் எதுக்கு என்பதால் சிவகார்த்திகேயன் மேனேஜர் கொடுத்த தொகையை வாங்கவில்லை. ஆனால் சிவகார்த்திகேயனின் மேனேஜர் அவரிடம் என்ன சொன்னார் என்று தெரியவில்லை. அதன்பிறகு சிவகார்த்திகேயன் தன்னிடம் பேசுவதே கிடையாது என வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் உலா வருகிறது. ஆனால், சிவகார்த்திகேயன் இதற்கும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை தொடர்ந்து இதே போல் பகீர் தகவல் வருவதால் சிவகார்த்திகேயனை நம்பி எந்த இயக்குனர்களும் படத்தை இயக்க முன் வருவதற்கு யோசிப்பதாக சினிமா வட்டாரங்களே கூறுகின்றனர்.