Cinema

நிக்ஷனை பார்த்து கேட்ட ஒரு கேள்வி!...பொங்கி எழுந்த அர்ச்சனாவின் அப்பா!...பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்தது என்ன?

Nixon, VJ Archana
Nixon, VJ Archana

தனியார் தொலைக்காட்ச்சியில் விறுவிறுப்பாக இறுதி கட்டடத்தை நோக்கி செல்லும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 7 இது கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் புயல் மழை என எது வந்தாலும் இந்த நிகழ்ச்சி மட்டும் மிக சிறப்பாக நடந்து கொண்டிருந்தது என சொல்லலாம். இந்த நிகழ்ச்சி குறித்து பல விமர்சனம் வந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளரின் அப்பா ஒருவர் போட்டியாளரை நேரில் சந்தித்து கேட்ட கேள்வி நிகழ்ச்சி காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.


விஜய் டிவியில் வருடத்திற்கு மூன்று மாதம் மட்டுமே ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக் பாஸ் இந்த வருடத்திற்கான நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடங்கியது. முதல் சீசனில் இருந்து தற்போது நடைபெறும் சீசன் 7 வரை முழுமையாக தொகுத்து வழங்குபவர் உலகநாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை காண மக்கள் பெரும் பட்டாளமே உள்ளது. 7 வது சீசன் தொடங்கியதும் 18 போட்டியாளர்கள் பங்கேற்றதும் நிகச்சி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றது. ஆரம்பம் முதலே இந்த போட்டியின் வெற்றியாளர் பிரதீப் என நினைத்த நிலையில் அந்த போட்டியாளருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது. குறிப்பாக கமல் மீது மக்கள் வனமதை கொட்டி வந்தனர். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நிகழ்ச்சி ஒருபக்கம் சென்று கொண்டிருக்க தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

18 போட்டியாளர்களுடன் களம் கண்ட நிகழ்ச்சி வாரம் ஒருவரை ஒட்டு மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. நாள்தோறும் எதாவது ஒரு பிரச்சினை, சண்டை என போட்டியாளர்களின் சத்தம் வீட்டிற்குள் அதிகமாக கேட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக புல்லி கேங்காக மாயாவும் பூர்ணிமாவும் செய்யும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது. இதனால் இளம் தலைமுறைகளை அந்த நிகழ்ச்சி கெடுத்து வருவதாக விமர்சனம் தொடர்ந்தது. மேலும், அரசியல் கட்சி சார்ந்தவர்களே கமலை கடுமையாக விமர்சித்தும் மக்கள் இடத்தில் முழுமையான எதிப்பு கிளம்பியது. இதனால் பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. நிகழ்ச்சியில் வாரம் ஒரு டாஸ்க் கொடுக்கப்படும் நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில்  ‘ஃபிரீஸ் டாஸ்க்’ ஆரம்பமாகின்றது. 

அதில் ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வர இருக்கின்றனர். போட்டியாளர்கள் 75 நாள்களை கடந்து வீட்டிற்குள் இருப்பதால் அவர்களும் இந்த டாஸ்க்கைத்தான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் பூர்ணிமாவின் அம்மா உள்ளே வர நேராக விசித்ராவிடம் பூர்ணிமாவிற்காக மன்னிப்பு கேட்கிறார். அதை பார்த்ததும் பூர்ணிமாவிற்கே ஷாக் ஆகி விடுகின்றது. அதனை தொடர்ந்து அர்ச்சனாவின் அம்மா மற்றும் அப்பா இருவரும் உள்ளே வருகிறார்கள். அதில் அர்ச்சனாவின் அப்பா போட்டியாளர் நிக்‌ஷனை பார்த்து என் பொண்ணை  ‘கள்ளி பாலை ஊத்தி அப்பவே கொன்றுக்கனும் ’ என்று சொன்னதும் என்னை மிகவும் காயப்படுத்தி விட்டது என்று சொல்ல அதற்கு நிக்‌ஷன் ‘என்னது நானா? அப்படி சொல்லவே இல்லையே’ என்று கூறுகிறார். 

அர்ச்சனா அப்பாவோ இல்லை நீங்கள் சொன்னிர்கள் என கூற நிக்சன் என்னை மன்னித்து விடுங்கள் என கூறினார். இந்த காணொளி இணயத்தில் வைரலாக அர்ச்சனாவுக்கு ஒட்டு வாங்கி கொடுத்து வீட்டில் இருக்க வைத்ததே நிக்சன் தான் இப்படி எதாவது ஆக்ரோஷமாக பேசினால் தான் மக்கள் பேசுவோருக்கு மாறாக ஓட்டுக்களை அதிஅக்ரிது கொடுப்பார்கள் இதை ஒரு வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சி என்று கூட தெரியாமல் நிக்சனிடம் கோவை படுவது நியமமல்ல என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.