Cinema

சற்றுமுன் திமுகவிற்கு திரைப்பட பாணியில் ஸ்கெட்ச் போட்டு பதிலடி கொடுத்த பாஜக !

Annamalai and stalin
Annamalai and stalin

தமிழகத்தில் மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்தாலும் அது மக்கள் மத்தியில் மத்திய அரசின் உதவியாக தெரியாத வண்ணம் மாநில அரசான திமுக செயல்படுவதாக பல நாட்களாக பாஜக குற்றம் சுமத்தி வந்தது, இருப்பினும் திமுக அரசு தொடர்ச்சியாக மத்திய அரசின் திட்டங்களை தங்கள் சாதனையாக மாற்றும் முயற்சி தொடர்வதால் சினிமா பாணியில் திமுக அரசை டீல் செய்துள்ளது பாஜக.


தமிழகத்தில் நரிக்குறவர் சமுதாயம் குறைவாக எண்ணிக்கை கொண்ட சமுதாயம் என்றாலும் அவர்களின் உணர்வுகள் ஊடகங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், MGR காலம் தொடங்கி தற்போதைய அரசியல் சூழல் வரை நரி குறவர் சமுதாயத்திற்கு என்று ஒரு முக்கிய இடம் உண்டு, ஆனால் இப்படிப்பட்ட நரி குறவர் சமுதாயத்தை தொடர்ந்து மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் மட்டுமே இத்தனை காலமாக இருந்தார்கள்.



ஏன் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் PCR சட்டத்தில் கைது செய்யப்பட்ட வரலாறும் உண்டு அப்படி இருக்கையில் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கடந்த 60 ஆண்டுகளாக நரிக்குறவர் சமூகத்தினர் முயற்சி செய்து வந்தனர், தமிழகத்தை சேர்ந்த முதல்வர்களை மாறி மாறி சந்தித்து மனு கொடுத்தனர், ஆனால் எந்த பயனும் இல்லை, இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நறுக்குறவர்கள் அமைப்பினர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் தங்களை ST பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதை கருத்தில் கொண்டு அண்ணாமலையும் மத்திய அமைச்சர்களுக்கு உண்மையில் நரிக்குறவர்கள் யார்? அவர்கள் சமுதாயம் சந்திக்கும் பிரச்சனை என்ன என தெளிவாக விளக்கம் கொடுத்து உள்ளார், இதையடுத்து நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களை MBC பட்டியலில் இருந்து நீக்கி ST பட்டியலில் சேர்க்க பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது மிக பெரிய முன்னேற்றத்தை நரிக்குறவர்கள் சந்ததிகள் மத்தியில் உண்டாக்கும் என்ற நிலையில் இந்த வெற்றியை வழக்கம் போல் மாநில திமுக அரசு கொண்டுவந்தது போன்று நரிக்குறவர் சமுதாய மக்களிடம் கொண்டு செல்ல முயற்சிகள் நடைபெற்றதாம், அதை உடனடியாக தமிழக பாஜக முறியடிக்கும் விதமாக சினிமாவில் வருவது போன்று முன்பே கணித்து, நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் என பலரை சந்தித்து இந்த விஷயம் பிரதமர் மோடி ஐயா அரசால் நடந்தது என தெளிவு படுத்தி இருக்கிறது.

தெளிவு படுத்தியதோடு இல்லாமல் நரிக்குறவர் சமுதாய மக்கள் பிரதமருக்கு நன்றி சொல்லும் வீடியோவை பாஜக பகிர்ந்து திமுக அரசிற்கு சாக் கொடுத்துள்ளது, இதில் மிக பெரிய பிளஸ் என்னவென்றால், எந்த நரிக்குறவர் சமுதாயத்தை சார்ந்த பெண் அஸ்வினி வீட்டிற்கு முதல்வர் ஸ்டாலின் சென்று திமுக எப்போதும் நரிக்குறவர் சமுதாயத்திற்கு ஆதரவான இயக்கம் என உறுதி கொடுத்தாரோ அந்த பெண்ணையே பிரதமர் மோடியின் சாதனைக்கு நன்றி சொல்லும் வீடியோவை வெளியிட்டு திமுகவின் ஸ்டிக்கர் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது பாஜக.

ரேஷன் கடையில் வழங்கப்படும் உணவு பொருட்களில் மத்திய அரசின் பங்குதான் 70% மேல் என்பதை கூட நாட்டு மக்களுக்கு கொண்டு செல்லாமல் இத்தனை நாள் தமிழகத்தில் ஆட்சி செய்த அரசுகள் ஸ்டிக்கர் ஒட்டிவந்த நிலையில், நரிக்குறவர்கள் சமுதாய விஷயத்தில் அதனை முறியடுத்து இருக்கிறது தமிழக பாஜக.