திமுகவை சேர்ந்த ஆ. ராசாவால் திமுகவிற்கு ஒரு காலத்தில் நன்மை நடந்ததோ இல்லையோ அவரால் திமுகவிற்கு சிக்கல் மேல் சிக்கலாக உண்டாகிவருகிறது, 2 ஜி வழக்கில் மத்திய அமைச்சராக இருந்து சிறை சென்றது, 2ஜி ஊழல் வழக்கை காரணம் காட்டியே திமுகவின் ஆட்சி பறிபோனது, அடுத்ததாக கடந்த சட்டமன்ற பொது தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்வதாக அவரது தாயை தவறாக விமர்சனம் செய்தார் ராசா.
இது கொங்கு பகுதிகளில் எதிரொலிக்க மாநிலத்தின் மற்ற பகுதிகளில் வெற்றி பெற்ற திமுகவால், கொங்கு மண்டலத்தில் வெற்றி பெறமுடியவில்லை, கொங்கு பகுதியில் திமுக தோல்வியை தழுவ ராசாவின் சர்ச்சை பேச்சே காரணமாக அமைந்து இருக்கிறது, இந்த சூழலில் தான் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
இந்து மத நம்பிக்கைகளை மேடை தோறும் இழிவாக பேசிவருவதாக ராசா மீது குற்றசாட்டு எழுந்த நிலையில், இந்துக்களை இழிவாக விமர்சனம் செய்யும் ராசாவின் வீடியோ வைரலாகி வருகிறது, இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் சூழலில், திரைப்பட இயக்குனர் கௌதமன் மறைமுகமாக விமர்சனம் வைத்தார் முதலில், கேள்வி எழுப்புவது வேறு கிண்டலடிப்பது வேறு.
தமிழ் குடிகளை கிண்டலடிப்பவன் ஒருபோதும் தமிழனாக இருக்க முடியாது என கௌதமன் குறிப்பிட அவரது பதிவிற்கு ஆ. ராசா ஆதரவாளர்கள் விமர்சனம் வைத்தனர் அதை தொடர்ந்து கௌதமன்,
தமிழ் சமூகத்தில் அனைவரும் ஒரு தாய் மக்களாக இருக்க வேண்டுமென்று செயல்படுகிறவன் நான். ஏண்டா தேவையில்லாமல் பேசி ஒரு சில தமிழ் குடிகளுக்குள் கலவரத்தை ஏற்படுத்தறன்னு பதிவிட்டா வரிசைகட்டி வந்து சம்மந்தமில்லாமல் பேசுகிறவர்கள்தான் சிந்திக்க வேண்டும். இருக்கும் வேலைகளுக்கு நடுவில் பொதுவாக நான் முகநூலில் யாருக்கும் பதில் சொல்வதில்லை. ஒரு புரிதல் வேண்டும் என்பதற்காகத்தான் பதில் சொன்னேன். பின்னூட்டம் இடும் சகோதரர்கள் மீண்டும் ஒருமுறை எனது பதிவை படித்துவிட்டு அந்தத் தப்பை எவன் செய்கிறான் என்று மட்டும் பதிவிடுங்கள். அது சரியா என்று மட்டும் விமர்சனம் செய்யுங்கள். அதுவே தமிழ் சமூகத்தின் ஒற்றுமைக்கு பயன் தரும். இதற்கு மேல் இதில் ஒன்றும் பேசுவதற்கில்லை. இதே தவறை அல்லது தப்பை தொடர்ந்து செய்தால் அவன் எவனாக இருந்தாலும் மிகச் சரியான பதிலடியை தர நான் தயங்கமாட்டேன் என குறிப்பிட்டார்.
இந்த நிலையில், இன்று காலை மீண்டும் அவரது முகநூலில் தமிழ் குடிகளுக்குள் பிரச்சனை செய்பவன் எவனாக இருந்தாலும் அவனை நேருக்கு நேர் நின்று தோல் உறிப்பேன் என கௌதமன் பதிவிட்டு இருக்க ஒரு கட்டத்தில் திடீர் என பதிவை நீக்கிவிட்டார் கௌதமன், ஏன் பதிவு நீக்கப்பட்டது, கௌதமன் மிரட்டபட்டாரா என்ற பல கேள்விகள் இப்போது எழுந்துள்ளன.
மொத்தத்தில் ஆ.ராசா பேசிய பேச்சுக்கள் சமூகத்தில் இரு தரப்பினர் இடையே மோதலை உண்டாக்கும் வகையில் இருப்பதால் அவரை கைது செய்வது மட்டுமே இனியும் வேறு சிலர் இது போன்ற பேச்சுக்களை பேசாமல் இருக்க பயன்படும் என்று கூறப்படுகிறது.