Technology

பயமுறுத்தும் AI வளர்ச்சி... வருத்தத்தில் சிக்கி வரும் ஊழியர்கள்... 2024ல் நடக்க போகும் அதிரடி மாற்றம்..!

AI, Employee
AI, Employee

தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களான ITல் பல்லாயிரக்கணக்கான் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். தற்போது முன்னணி நிறுவனமான WIPRO, TCS போன்ற நிறுவனக்களில் வேலை செய்து வரும் ஊழியர்களை வெளியில் அனுப்பி வருகின்றனர். இதற்கு எல்லாம் முக்கியகாரணமாக தொழில்நுப்டம் வளர்ச்சியே காரணம் என ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.


தொழிநுட்ப வளர்ச்சியால் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வெளிநாடுகளில் தோன்றியதாக இருந்தாலும் அதன் செய்லபாடுகள் தற்போது அதிகரித்துள்ளது இந்தியாவில், அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்டது. மனிதர்களின் பல்வேறு பணிகளை இந்த தொழில்நுட்பம் எளிதாக்கி இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், அதுவே மனிதர்கள் செய்யும் வெளிக்கு உலை வைத்துவிடும் என பெரும்பாலானோர் அச்சத்தில் இருக்கின்றனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ந்து வரும் வேளையில் , தொழில்நுட்ப துறைகளில் ஊழியர்களும் பணி நீக்கமும் அதிகரிக்க வண்ணமே இருக்கிறது. 

2024ம் ஆண்டில் மட்டும் முன்னணி நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனம் வரை ஊழியர்கள் பணிநீக்கம் என்பது ஒரு மாத காலத்திற்குள் 136% பணிநீக்கம் அதிகரித்துள்ளது. அதாவது 82,000 ஊழியர்கள் லே ஆஃப் செய்யப்பட்டுள்ளனர் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கெல்லாம் முக்கிய காரணம் பொருளாதார செலவு வருவாய் ஈட்ட முடியாத சூழல் இருப்பதாக நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.  பொருளாதர இழப்பு என்பது ஒரு பக்கம் இருந்தாலும் தொழில்நுட்ப வளர்ச்சியினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். 

சேலஞ்சர் கிரே எனப்படும் அமெரிக்க நிறுவனம் ஒன்று அண்மையில் ஒரு ஆய்வினை நடத்தியது. அந்த ஆய்வின் இறுதியில் பல்வேறு துறை சார்ந்த பணிகளுக்கும் ஆபத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. புரோகிராமர்ஸ், நிறுவன மேலாண்மையில் இருப்பவர்கள், வழக்கறிஞர்கள், அக்கவுண்டண்ட்ஸ், காப்பீடு துறை, நிதி சார்ந்த பணிகளுக்கு எல்லாம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சவாலை ஏற்படுத்தும் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏஐ என்பது ஒரு நிறுவனத்தில் ஒரு ப்ரொஜெக்ட்டை ஊழியர்கள் எடுத்து கொள்ளும் பணி நாட்களை விட மிக குறைவான நாட்களே ஆகும் என தெரியவருகிறது.

கடந்த வருடம் இந்த ஏஐ மூலம் இந்தியாவில் வெளியில் வந்த ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிநீக்கம் செய்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக ஆட்டோமேஷன் என்பது அதிகரித்துள்ளது. அதாவது ஒரே மாதிரியான திரும்ப திரும்ப செய்யக்கூடிய வேலைகளை தொழில்நுட்பமே செய்துவிடுவதால் அந்த பணிக்கு மனிதர்கள் தேவையில்லை என நிறுவனங்கள் நினைக்கின்றன. செய்தி ஊடகங்களிலும் ஜனவரி மாதத்தில் 528 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், அது அமெரிக்காவில் இத்துறையில் கடந்த ஓராண்டில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.

தற்போது அனைத்து துறைகளிலும் AI நுட்பம் அதிகரித்துள்ளதால் ஒவ்வொரு நிறுவனத்தின் பணியாளர்கள் கடும் வருத்தத்தில் இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக இந்த ஆண்டு இறுதிக்குள் பல நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் வெளியேற்றப்படலாம் என தெரிகிறது. செய்தி ஊடகத்திலும் செய்தி வாசிப்பதற்கு ஏஐ பயன்பாடு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.