Technology

கெஞ்சி கேட்டாலும் வேண்டாம்... இணையத்தில் விரிக்கப்படும் சதிவேலை.... அடுத்த குறி நீங்கதான்.....

bike loan
bike loan

நிம்மதி என்பது ஒரு சாதாரண மனிதர் முதல் வசதி படைத்த மனிதர் வரை அனைவருக்கும் தேவையான ஒன்று! வீட்டில் பணம் இருக்கிறதோ இல்லையோ வசதி இருக்கிறதோ இல்லையோ நிம்மதி என்பது இருந்தால் மட்டுமே தூக்கம் கிடைக்கும் தூங்கினால் மட்டுமே உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும் இதில் நிம்மதி என்பது தடைப்பட்டால் அனைத்தும் சொதப்பலாகி பெரும் மன உளைச்சலுக்கும் மன சோர்விற்கும் ஆளாக்கப்படுவோம்! எப்போதெல்லாம் நிம்மதி என்பது இலக்க நேரிடுகிறது என்று பார்த்தால் குடும்பங்களில் ஏற்படும் சண்டைகள் உறவுகளுக்குள் ஏற்படும் சண்டைகள் நண்பர்களுக்குள் ஏதேனும் சண்டை கணவன் மனைவிக்குள் ஏற்படும் சண்டை குழந்தை ஏதாவது பிரச்சனைக்குள் மாட்டி அதனால் வரும் மன உளைச்சல் வேலை பார்க்கும் இடத்தில் ஏதேனும் பிரச்சனை இப்படி அதிகம் கூறப்படுகிறது இதில் கடனும் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது நிம்மதி பறிபோவதற்கு, சினிமாவில் கடன் வாங்கியவர் ஏற்படும் பாதிப்புகள் கடன் வாங்கியவர் குடும்பம் ஏற்படும் பாதிப்புகள் மட்டுமே பெருமளவில் காண்பிக்கப்பட்டுள்ளது ஆனால் தற்போது எல்லாம் கடன் கொடுத்தவர்களும் பெரும் பாதிப்பையும் இழப்பையும் சந்தித்து வருகின்றனர்.


அதிலும் குறிப்பாக அவர்கள் தன் நண்பருக்கு தனக்கு மிகவும் தெரிந்தவருக்கு உறவினர்களுக்கு என அவர்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு கடன் கொடுத்து பிறகு அவர்கள் கடனை திரும்ப செலுத்தாமல் அந்த கடனை திரும்ப பெறுவதற்காக கடன் கொடுத்தவர் அவரிடம் கேட்கும் பொழுதும் அவர்களுக்குள் இருக்கும் உறவையும் இழக்க நேரிடுகிறது. கடனை ஒருவர் தன் நண்பரிடம் கேட்கும் பொழுது தனது சூழ்நிலைகளை எடுத்துக் கூறி தனது கஷ்டத்தையும் குடும்பத்தையும் எடுத்துக் கூறி மனிதாபிமானத்தில் பணத்தை பெறுகிறார், அதற்குப் பிறகு கடன் கொடுத்தவரால் தன் நண்பரிடம் இருந்து கடனை திரும்ப கேட்க முடியாமலும் அதனால் பல பின் விளைவுகளையும் அவர் சந்தித்து வருகிறார்.அதுமட்டுமின்றி சிலர் தன் தகுதிக்கு மீறி வங்கி மற்றும் பிற நிதி நிறுவனங்களிடம் தனது நண்பருக்கு பணத்தை வாங்கி கொடுக்கிறார்கள் அதிகாரப்பூர்வமாக கடனை வாங்கியது ஒருவர் ஆனால் வாங்கி கொடுத்த ஒரு செயலுக்காக பாதிக்கப்படுபவர் அந்த நண்பர் மட்டுமே! கடன் அன்பை முறிக்கும் என்று சாதாரணமாக கூறவில்லை என்பது பெரும் இக்கட்டான சூழ்நிலையில் கடன் கொடுத்து திரும்ப பெற முடியாத பொழுது மட்டுமே மிகவும் அர்த்தமுள்ளதாக மாறி தெரியும்! அப்படி தற்போது சமூக வலைதளத்தில் நெடிசன் ஒருவர் தயவு செஞ்சு உங்க தகுதிக்கு மேல் எவனுக்கும் பணம் கடன் வாங்கி கொடுக்காதீங்க, முடிஞ்சா அஞ்சோ பத்தோ உதவி பண்ணுங்க.

அதுக்கும் மேல லாம் அவங்க relationship போய்டுமென்னு கவலை பட்டு ஹெல்ப் பண்ணி மன உளைச்சல் க்கு ஆளாகதீங்க என்று பதிவிட்டு தனது நண்பரிடம் பணம் கொடுத்துவிட்டு திரும்பப் பெற முடியாமலும் அவரை தொடர்பு கொள்ள முடியாமலும் தனது நண்பருக்கு மெசேஜ் அனுப்பிய பக்கத்தையும் இணைத்துள்ளார். அதோடு, மற்றும் ஒரு நெடிசன் 85000ரூபாய்.. ஒரு வருடம் ஆக போகுது...எவங்கிட்டயும் இந்த அளவுக்கு நான் இறங்கி போனது இல்லை.. ஆனா கடன் கொடுத்த பாவத்துக்கு பிச்சை மட்டும்தான் நான் அந்த டைம் ல எடுக்கல.. என பதிவிட்டிருந்தார் மேலும் தெரிஞ்ச பையனுக்கு என் பெயரில் loan போட்டு bike எடுத்து கொடுத்தேன். அவன் ஒழுங்கா பணம் கட்டவிலை. வங்கியில் இருந்து எனக்கு தான் அழைப்பு வரும். நீங்க பணம் கட்டுங்க பிறகு தரேன் என்றான். நானும் கட்டினேன். ஆண்டு 1 ஆகிறது இன்னும் பணம் வரல என்ற மற்றுமொரு கமெண்டும் இதற்கு பதிவிடப்பட்டுள்ளது. ஆன்லைன்ல பழகி கடன்கேட்டா கொடுக்காதீங்க என இணையவாசிகளால் இந்த பதிவிற்கு அதிகம் கமெண்டுகள் செய்யப்படுகிறது