Cinema

வைரலாகும் பிரபல நடிகை நிவேதா பெத்துராஜின் வீடியோ!!! ஓ இது தான் காரணமா!!!

NIVETHA PETHURAJ
NIVETHA PETHURAJ

ஒரு நாள் கூத்து என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஹீரோயினியாக நடித்து வரும் பிரபலமான நடிகை தான் நிவேதா பெத்துராஜ்!! தெலுங்கில் முதல் முதலில் மெண்டல் மடிலோ என்ற திரைப்படத்தில் 2017 ஆம் ஆண்டு அறிமுகம் ஆகியுள்ளார். அதன் பிறகு தமிழிலும் எம்மனசு தங்கம் என்ற திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து நடித்தார். இவ்வாறு தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்து வந்த நிவேதா பெத்துராஜ் பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் குறுகிய காலத்தில் திரைப்படங்களில் பிரபலமான ஹீரோயின்களில் மத்தியில் இவரும் ஒருவராக இருந்து வருகிறார். 


மேலும் இவர் ஒரு தமிழ் நடிகையாகவும், தமிழ்நாட்டில் மதுரையில் பிறந்து வளர்ந்த ஒருவராகவும் இருக்கிறார். பல அவார்ட் வழங்கும் நிகழ்ச்சிகளில் கூட இவர் மதுரை சேர்ந்த நடிகை என்று பலரும் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து தற்பொழுது தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடித்து அதிக அளவில் ரசிகர்களையும் பெற்று வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நிவேதா பெத்துராஜ் போலீசாரிடம் மாட்டிக் கொண்ட வீடியோ ஒன்று வெளியாகி அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது!! அந்த வீடியோ குறித்து விரிவாக காணலாம்!! ஹைதராபாத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் காரில் அமர்ந்தபடி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருப்பது போன்ற வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வந்தது. நிவேதா பெத்துராஜ் காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது போலீசாரால் காரை நிறுத்தப்பட்டு காரின் பூட்டை திறக்குமாறு கூறியுள்ளனர். இந்த நிலையில் நிவேதா பெத்துராஜ் காரின் பூட்டை திறக்க முடியாது என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகிறது. அப்போது வீடியோ எடுக்கும் நபரையும் எதற்காக வீடியோ எடுக்கிறீர்கள் என்று கேமராவை தள்ளி விடுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் அமைந்திருந்தது. 

மேலும் எதற்காக இந்த வீடியோவில் நிவேதா பெத்துராஜ் காரின் பின்னால் இருக்கும் டிக்கியை திறக்க மறுக்கிறார் என்றும், அது என்ன வைத்திருக்கிறார் எனவும் வீடியோ பார்க்கும் அனைவரும் கேள்விகளை எழுப்பி வந்தனர்!! இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வெறும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் வைரலாக தொடங்கியது. இந்த நிலையில் தற்பொழுது இந்த வீடியோ குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது!! அது என்னவென்றால்...இந்த வீடியோவில் காணப்பட்ட போலீசார் சரியான சீருடை அணிந்து இல்லாத காரணத்தினால் பலரும் இது ஏதேனும் சூட்டிங் ஆக இருக்கும் என்று  நினைத்து வந்தனர். இந்த நிலையில் தற்பொழுது அந்த வீடியோவானது பருவு என்ற வெப் சீரிஸில் தற்பொழுது நிவேதா பெத்துராஜ் நடிப்பு வருவதாகவும் அந்த சீரியஸுக்காக எடுக்கப்பட்ட ஷூட்டிங்கில் எடுத்த வீடியோ தான் இது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்த குறிப்பிட்ட காட்சியில் காரின் டிக்கியில் பிணத்தை வைத்து சுற்றிக்கொண்டு இருப்பது போன்ற காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது எனவும் அதனால் தான் நிவேதா பெத்துராஜ் காரின் டிக்கியை திறக்க மறுத்ததாகவும் கூறுகின்றனர். தற்போது இந்த வீடியோ முழுக்க முழுக்க ஷூட்டிங்ிற்காக தான் எடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து பதட்டத்தில் இருந்த நிவேதா பெத்துராஜின் ரசிகர்கள் தற்போது சூட்டிங் என்று செய்தி வெளியானதை தொடர்ந்து  நார்மல் ஆகியுள்ளனர். இது குறித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும்  இணையத்தில் வெளியானது குறித்து பலதரப்பட்ட விமர்சனங்கள் சிலரை குறிவைத்து எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது....