Cinema

அனிமல் படத்தை பாராட்டிய நடிகை..!

Lakshmi, Radhika
Lakshmi, Radhika

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ராதிகா சரத்குமார். இவர் ரஜினிகாந்த், சத்யராஜ் உள்ளிட்டோருடன் ஜோடியாக நடித்திருப்பார். தற்போது நடிகர்களுக்கு அம்மா என்கிற காதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். அத்துடன் சின்னத்திரையிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ராதிகா சரத்குமார் தனது எக்ஸ் தளத்தில் திரைப்படம் ஒன்றை கடுமையாக விமர்சித்து பகிர்ந்துள்ள பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான சரத்குமார் இவருடைய மனைவி ராதிகா எப்போதும் ஒரு படத்தை பற்றி விமர்சித்தது கிடையாது. இந்நிலையில் தனது எக்ஸ் தளத்தில், 'மிகவும் அருவருப்பாக உள்ளது. நான் பார்த்த படத்தை தூக்கி எறிய எண்ணுகிறேன். ரொம்ப கோபமாக வருகிறது என ஆவேசமாக பதிவிட்டுள்ளார். ஆனால் நாகரீகம் கருதி அது எந்தப்படம் என்பது ராதிகா குறிப்பிடவில்லை. இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கு பிடிக்காத படங்களின் பெயர்களை ராதிகாவின் பதிவிற்கு கீழ் கமெண்ட் அடித்து வருகின்றனர். ஆனால் ராதிகா குறிப்பிடும் அந்தப்படம் அனிமலாக தான் இருக்க வேண்டும் என பெரும்பாலானோர் கூறி வருகின்றனர்.

கடந்த மாதம் வெளியான அனிமல் படத்தில் ராஷ்மிக்கா மந்தனா நடிப்பு காட்சிகள் ஏதும் பாராட்டும் விதமாகா இல்லை. டீப் பேக் வீடியோ வெளியான போது பொங்கி எழுந்த நடிகை ராஷ்மிக்கா இது போன்ற படங்களை தேர்வு செய்யலாமா என கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஏற்கனவே சந்தீப் ரெட்டி ரங்காவின் 'அர்ஜுன் ரெட்டி' படம் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்த நிலையில் 'அனிமல்' படமும் அதே போன்று விமர்சனத்தை சந்தித்தது. அனிமல் படம் நெட்பிளிக்ஷில் வெளியானதும் ரசிகர்கள் தெரிவித்தது யாரும் குடும்பத்துடன் இந்த படத்தை பார்க்க வேண்டாம் என தெரிவித்தனர். 

படம் வெளியான உடன் பள்ளிக்கு துப்பாக்கி எடுத்து செல்வது போன்ற காட்சிகள் இருக்கும் அதற்கெல்லாம் எப்படி சென்சோர் போர்ட் அனுமதித்தது என விமர்சனம் வைத்தனம். கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் ஒருவர் அந்த படத்தை எல்லாம் பார்க்கமாட்டேன் என கூறினார். இந்நிலையில் இதுவரை அனிமல் படத்திற்கு யாரும் நல்ல படம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்று யாரும் சொன்னது கிடையாது. அந்த வகையில் நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், இன்று அனிமல் படம் பார்த்தேன், கற்பனை, நடிப்பு, கைவினை, பிரம்மாண்டம், மற்றும் வக்கிரம் என அனைத்தும் சிறப்பு. அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான க்ளைமாக்ஸ் காட்சி அருமை, தீவிர வன்முறையைக் கொண்டாடுதல், திரையில் இரத்தம் சிந்துதல் மற்றும் அனைத்தும் அனுராக் காஷ்யப் பாராட்டியதை போல் இருக்கிறது. வாவ் என படத்தை புகழ்ந்து பாராட்டி உள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் மேடம் இது ஆக்‌ஷன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி என்ன ட்ராமாவா என்றும் இத்தவரை தமிழில் எத்தனையோ நல்ல படங்கள் வெளியாகியிருக்கிறது இதற்கெல்லாம் உங்கள் வாவ் போடவில்லை அனிமல் படத்தில் எதை பார்த்து மெய் சிலிர்த்து இப்பட்டி வாவ் போடுகிறீர்கள்? நடிகை ராதிகா ஒரு பதிவு போட்டதற்காக நீங்கள் பதிலடி கொடுக்கும் விதமாகவா இல்லை உங்களுக்கும் ராதிகாவுக்கும்  எதாவது  பிரச்சனை உள்ளதா என சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.