பொங்கலுக்கு குடும்பத்துடன் இணைந்து பார்க்கும் விதமாக பல படங்கள் வெளியாகவுள்ளது அந்த வரிசையில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படமும் பொங்கலன்று வெளியிட முடிவு எடுத்துள்ளனர். சுமார் 5 வருடத்திற்கு முன்னாடி எடுக்கப்பட்ட படம் பல பணிகளை செய்து முடிக்க படம் வெளியிட காலதாமதம் ஏற்பட்டது. ஒரு வழியாக பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது படக்குழு அயலான் படத்தில் ஏலியனுக்கு வாய்ஸ் கொடுத்த பிரபலத்தை வெளியில் காட்டியுள்ளது.
இன்று நேற்று நாளை திரைப்படம் மூலம் பிரபலமான ரவிக்குமார், அயலான் படத்தை இயக்கியுள்ளார். இன்று நேற்று நாளை படத்தை சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் டைம் ட்ராவலை பின்னணியாக வைத்து இயக்கியிருந்தார் ரவிக்குமார். அதேபோல் அயலான் படத்தையும் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் ஏலியன்ஸை பின்னணியாக வைத்து இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் இந்தியளவிலும் அயலான் தான் முதல் ஏலியன்ஸ் படம் என சொல்லப்படுகிறது. அயலான் படம் வெளியிட 2018ம் ஆண்டு திட்டமிட்ட நிலையில், அது படத்தின் கிராபிக்ஸ் பணிகள் சரியாக அமையாத காரணத்தால் படம் வெளியிட தடை ஏற்பட்டது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
அயலான் படத்தின் நடித்த அந்த ஏலியனுக்கு வாய்ஸ் கொடுக்க பிரபல நடிகர் வடிவேலுவிடம் படக்குழு சென்றது ஆனால், வடிவேலு நோ சொன்னதால் படம் வெளியிட ஒரு தடை ஏற்பட்டுள்ளது. வடிவேல் ஓகே சொல்லியிருந்தால் இந்த அயலான் படம் இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகி இருந்திருக்கும். நடிகர் சிவகார்த்திகேயன் மீது குற்றசாட்டு எழுந்ததன் காரணமாகவே அந்த ஏலியனுக்கு வாய்ஸ் கொடுப்பதில் சிரமம் ஏற்படுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தில் அந்த ஏலியன்க்கு வாய்ஸ் கொத்தவரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக படக்குழு டிவீட்டரில் வெளியிட்ட படக்குழு சித்தார்த்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்தது. படப்பிடிப்பு முடிந்து ரிலீஸாகவுள்ள நேரத்தில் சித்தார்த் எதற்காக இணைந்தார் என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். அதாவது அயலான் படத்தில் வரும் ஏலியன்ஸ் கேரக்டருக்கு சித்தார்த் தான் டப்பிங் கொடுத்துள்ளாராம். அயலான் டீசரில் சிவகார்த்திகேயனுடன் ஏலியன்ஸ் ஒன்றும் அட்ராசிட்டி செய்திருந்தது. அதற்கு சித்தார்த்தை வாய்ஸ் ஓவர் கொடுக்க வைத்துள்ளார் இயக்குநர் ரவிக்குமார். ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்திருந்தார். இப்போது மேலும் ஒரு படத்திற்கு நடிகர் சித்தார்த் வாய்ஸ் கொடுத்ததால் சிவகார்த்திகேயனின் அயலான் படத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
ஏற்கனவே பொங்கலுக்கு ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் படமும், தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படமும், சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை பாகம் நான்கும் அந்த வரிசையில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படமும் அந்த வரிசையில் இணைந்துள்ளது. பொடுத்திருந்து பாப்போம் எந்த படம் முதல் இடத்தில வரப்போகிறது என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த அயலான் படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதாக இணையத்தில் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.