சிவகார்த்திகேயன் வெள்ளி திரையில் மனம்கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற நகைச்சுவை கலந்த படங்களில் நடித்து மக்கள் இடத்தில் நீங்காத இடம் பிடித்தார் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த இவர் தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடித்து வருகிறார். காஷ்மீரில் ஷூட்டிங் பணிகள் நடந்து வரும் நிலையில், கமல்ஹாசன் நேரம் பார்த்து பெரிய ஆப்பாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் ஒரு கட்டத்தில் பல முன்னணி நடிகர்களின் குரலை சிவகார்த்திகேயன் பேசி கைதட்டலை வாங்கினார். அதன் பிறகு இவரின் திறமையை கண்டு நடிகர் தனுஷ் தான் நடித்த 3 படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க தேர்ந்தெடுத்தார். அந்த வாய்ப்பை பிடித்த சிவகார்த்திகேயன் அதன் பிறகு நடிகராக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சிவகார்த்திகேயன் படம் என்றாலே காமடி கலந்த நகைச்சுவை படமாக தான் இருக்கும். இவரின் படத்திற்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் சிவகாத்திகேயன். தற்போது நடிகர்கள் தான் நடித்த படத்தின் மூலம் சம்பாதித்தை வைத்து தயாரிப்பு நிறுவனத்தி தொடங்குவது வழக்கமாகிவிட்டது.
அந்த வகையில் நடிக்கற் சிவகார்த்திகேயனும் 10 படங்களுக்கு மேல் நடித்து தனக்கென்று ஒரு தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினார். தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் வெற்றி படத்திற்காக காத்திருந்த போது மாவீரன் படம் அமைந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படத்தில் கமிட் ஆனார். அந்த வரிசையில் தொடர்ந்து பட வாய்ப்பு வந்த நிலையில், கமலின் ராஜ்கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகை சாய் பல்லவி உடன் நடித்து வந்தார். தொடர்ந்து பட வாய்ப்புகளை ஏற்படுத்திய நிலையில் பிரச்சனையும் ஆரம்பித்தது.
அதாவது, சிவகார்த்திகேயன் மூலமாக தன் வாழ்க்கையை இழந்து விட்டதாக பிரபல இசையமைப்பாளர் இமான் தெரிவித்ததும் சிவகார்த்திகேயன் மலை போல் கட்டி வைத்த பேர் புகழ் ஒட்டுமொத்தமாக சரிந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக இமானின் மனைவி விவகாரத்துக்கு காரணமே சிவகார்த்திகேயன் தான் என நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது வைரலானது. இதனால் பட வாய்ப்புகளும் அப்படியே குறைய தொடங்கியது. இந்த விவகாரத்திற்கு சிவகார்த்திகேயன் தரப்பு எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை எல்லாம் படிப்படியாக மறைக்க சிவகார்த்திகேயன் நினைத்து சென்னையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண தொகையை கொடுத்தார் ஆனால் சுத்தமாக எடுபடவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடித்து வந்த படம் 60 நாட்களில் காஷ்மீரில் முதற்கட்ட படப்பிடிப்பை முடிக்க வேண்டிய நிலையில் 90 நாட்களுக்கு மேல் எடுத்துக்கொண்டதால் தயாரிப்பு நிவனர் கமல்ஹாசன் கடுமையாக சாடியுள்ளார். இந்த அதிகப்படியான நாட்கள் சென்றுள்ளதால் தயாரிப்பு நிறுவனத்திற்கு குறிப்பிட்ட தொகையை விட அதிகாமாக சென்றதால் பட்ஜெட்டை சரி செய்ய நடிகர் சிவகார்த்திகேயன் சம்பளம் மீது தயாரிப்பு நிறுவனம் கை வைத்து விட்டதாம். இதனால், எந்த பக்கம் சென்றாலும் அடி மேல் அடி விழுந்து வருகிறது என நினைத்து மன உளைச்சலுக்கு சென்றுவிட்டாராம். இதனால் இழந்த பெயரை எப்படியாவது மீட்க வேடனும் அடர்க்கு எதாவது ஒரு அரசியல் கட்சியுடன் இணைந்து செயல்பட்டால் அந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்கும் என திட்டம் போட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே திமுகவிடம் சிவகார்திகேயன் நிவாரணத்தொகை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.