Cinema

பாபா ரஜினியாக மாறிய அத்தை! இணையத்தை கலக்கும் வீடியோ!

rajinikanth
rajinikanth

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, விஜயகுமார் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்த பாபா திரைப்படம் 2002ல் திரையரங்குகளில் வெளியானது. 80 மற்றும் 90 களில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருந்த ரஜினிகாந்த் பல மாறுபட்ட படங்களில் நடித்தவர் சென்டிமென்ட் காதல் நகைச்சுவை திரில்லர் மற்றும் வில்லனாகவும் இவர் நடித்திருக்கிறார் இந்த வரிசையில் பாபா திரைப்படம் சூப்பர் ஸ்டாரின் திரை வாழ்க்கையில் ஒரு மாறுபட்டது. இப்படம் ஆரம்பத்தில் காதல் மற்றும் கமர்சியல் கலந்ததாக இருந்தாலும் பிறகு ஆன்மீகத்தை அடிப்படையாக வைத்து முழுவதும் ஆன்மீகத்தை மட்டுமே மையக்கருத்தாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும். மேலும் சூப்பர் ஸ்டார் இந்த கதையை தனது நிஜ வாழ்வில் நடந்தது என்றும் கூறியுள்ளார் அதற்கு ஏற்றார் போல் வருடம் ஒரு முறை ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு இமயமலைக்கு சென்று வரும் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான இந்த பாபா திரைப்படம் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. 


அதோடு இப்படத்தில் சூப்பர் ஸ்டார் தங்கியிருக்கும் தனது வீட்டில் எதிர் வீட்டில் நாயகியான மனிஷா கொய்ராலா தங்கியிருப்பார் அப்படி அதிகாலையில் தனது மொட்டை மாடியில் மனிஷா கொய்ராலா மற்றும் அவரது சகோதரிகள் அதிக ஒளியில் பாட்டி வைத்துக்கொண்டு உடற்பயிற்சி மேற்கொண்டு இருப்பார்கள். அதனை தன் வீட்டின் பால்கனி வழியாக பார்த்த சூப்பர் ஸ்டார் விசிலடித்து அவர்களை கூப்பிட்டு என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்ன கேட்க அதற்கு நடிகை பார்த்தா தெரியலயா ஏன் இப்படி வெட்ட வெளில எல்லாரும் பாக்குற மாதிரி பண்றீங்க என்று சூப்பர் ஸ்டார் கேட்பார். என் வீட்டு மொட்டை மாடியில நான் எக்சசைஸ் பண்றதுல என்ன தப்பு என்று மனிஷா கொய்ராலா கேட்க கரெக்டுதான் உங்க வீடு உங்க வீட்டு மொட்டை மாடி நீங்க என்ன வேணா பண்ணலாம் ஆனா இங்க பாருங்க சுத்தி பாருங்க எல்லாரும் பேட் பாய்ஸ் அலையுறானுங்க, வீட்டுக்குள்ள போய் பண்ணுங்க என்று சூப்பர் ஸ்டார் கூறியதற்கு மிஸ்டர் எக்ஸ்சர்சைஸ் எல்லாம் காத்தாட வெட்ட வெளியில் தான் பண்ணனும் எக்சசைஸ் பத்தி உனக்கு என்ன தெரியும் என்றும் கேள்வி எழுப்ப! அதற்கு சூப்பர் ஸ்டார் எனக்கு exercise பத்தி ஒன்னும் தெரியாது ஆனால் யோகாசனம் பற்றி கொஞ்சம் தெரியும், நம்ம நாட்டுப் பெண்கள் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் ஒவ்வொரு ஆசனங்கள் உள்ளது!

ஆனா அது அவங்களுக்கே தெரியாது, அத அவுத்து விடட்டா குனிந்து நிமிர்ந்து கூட்டு பெருக்கி கோலம் போடுவது கூர்மாசன உட்கடாசனம் முதுகெலும்புக்கு நல்லது முறுக்கு பிழிஞ்சு அடிச்சு துவைத்தால் ஹர்த் குர்தாசனம் கைக்கு விரலுக்கு நல்லது குடத்தை தூக்கி இடுப்புல வச்சு நடந்தா தடாசன பாஸ்ப பங்கி இடுப்புக்கு நல்லது நம்ம நாட்டுல பாரம்பரியபடி மண்டி போட்டு குனிஞ்சு நமஸ்காரம் பண்றாங்களே அதுவும் ஒரு ஆசனம் அஸ்திநிஸ்டா! நம்ம நாட்டு ஏழைகளுக்கு வறுமையிலும் உடம்பு ஏன் கின்னுனு இருக்கு தெரியுமா வெயில்ல கட்டட வேலைல தலையில செங்கழு தூக்கிட்டு போறாங்கல்ல அப்போ உடம்பு நேர் ஆகிறது, உடம்புல இருக்க ஆறு சக்கரங்களும் சீர் ஆகுது என்று அந்த ஆறு சக்கரங்களின் பெயரையும் குறிப்பிட்டு இதெல்லாம் புரியுதா உனக்கு என்ன மூச்சு விடாமல் ஒரு நீண்ட வசனத்தை பேசி இருப்பார். இந்த வசனம் இன்று வரையிலும் பிரமிப்பை ஏற்படுத்தக்கூடியது. இந்த வசனங்கள் அனைத்துமே பொய்யல்ல உண்மை என்று இப்படத்தில் நடித்திருந்த விஜயகுமார் கூறியிருப்பார்.

தற்போது சூப்பர் ஸ்டாரை போன்ற ஒரு அத்தை தனது மருமகளுக்கு உடல் எடை குறைப்பதற்கான வழிகளை கூறியுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அதில், எவ்வளவுதான் வீட்டு வேலை செஞ்சாலும் உடம்பு வெயிட் போட்டுட்டே போகுது அத்தை ஏதாச்சும் ஒரு டிப்ஸ் கொடுங்களேன் என்று மருமகள் கேட்க அதற்கு அத்தை டிப்ஸ் எல்லாம் எதுவும் இல்ல தினமும் கோவிலுக்கு போயிட்டு வா உடம்பு குறைஞ்சிடும் என்று கூறினார் கோவிலுக்கு போன புண்ணியம் கிடைக்கும்னு சொல்லுவாங்க நீங்க என்ன உடம்பு குறைஞ்சிடும்னு சொல்றீங்க எப்படி என்று கேட்க ஆமாம் கோவில் கோபுரத்தை பார்த்ததும் நீ கையெடுத்து கும்பிடுவது பார்தோ உத்துவ அஸ்தாசனா, அதுக்கு பிறகு கோவிலுக்குள் நுழையும் போது குனிஞ்சு கும்பிடுவது, கோவை கருவறையில் கையெடுத்து கும்பிடுவது, கருவறையை மூன்று முறை சுற்றி வருவது, ஒவ்வொரு தெய்வத்துக்கிட்டையும் தரையோடு விழுந்து கும்பிடுவது, கடைசியாக சமணம் இட்டு கோவிலில் அமர்வது என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு ஆசனங்களின் பெயர் உள்ளது என்று அத்தை தன் மருமகளுக்கு கோவில் செல்வதால் உடல் எடை குறைவதை ஆசனங்களோடு ஒப்பிட்டு எளிமையாக கூறியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.