பொழுப்போக்கிற்கு சினிமா பார்க்கும் காலம் மாறி இப்போது சினிமாவின் மூலம் மூளை சலவை செய்வதும், சொந்த நாட்டிற்கு, இனத்திற்கு எதிராகவும் ஆளுகிற அரசாங்கத்திற்கு எதிராக காட்சிகள் வைப்பதில் மட்டுமே சிலர் தங்கள் கொள்கையாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர்கள் விஜய்,சூர்யா, விஜய் சேதுபதி இன்னும் பலர் தங்கள் திரைப்படங்களில் இந்தியாவின் கொள்கைகள் குறித்து விமர்சனம் செய்து வந்துள்ளனர், மேலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு சொந்த நாட்டினை இழிவு படுத்தும் பேச்சும், காட்சிகளும் திரைப்படத்தில் இடம்பெற்று வருகிறது, இது இந்திய ஒருமைப்பாட்டினை சிதைக்கும் வகையில் சில நேரங்களில் உண்டாகி விடுகிறது.
மேலும் முன்னோர்கள் பேணி பாதுகாத்த ஒற்றுமை, சுதந்திரம் ஆகியவற்றை கருத்து சுதந்திரம் என்ற ஒரு காரணத்தை காட்டி சினிமா நட்சத்திரங்கள், இயக்குனர்கள் ஆகியோர் வளரும் இளம் தலைமுறையை தவறாக வழிநடத்தி வருவதாகவும் பலரும் மத்திய அரசிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து இந்தியாவின் இறையான்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிரான கருத்துகளை உள்ளடக்கிய வசனங்கள் இனி எந்த ஒரு திரைப்படங்களில் இருந்தாலும் அதனை மத்திய தணிக்கை குழுவிற்கு அனுப்பி அந்த சினிமாக்களை தடை செய்யும் விதமாக இந்திய சினிமாட்ட கிராப் சட்டவிதியான 52 வது பிரிவில் திருத்தங்களை கொண்டு வர இருக்கிறது மத்திய மோடி அரசு
இதன் மூலம் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் கலவரத்தை தூண்டும் விதமாகவும், ஒருமைப்பாட்டை சீர்கெடுக்கும் விதமாகவும் காட்சிகள் இடம்பெற்றுள்ள திரைப்படங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு தயாராகியுள்ளது. இது தமிழகத்தில் மத்திய அரசாங்கத்தை உள்நோக்கத்துடன் எதிர்த்துவரும் விஜய், விஜய் சேதுபதி சூர்யா உள்ளிட்ட நபர்களுக்கு எதிர்வரும் காலத்தில் சிக்கலை கொடுக்கலாம் என கூறப்படுகிறது.
திமுகவிற்கு பிரச்சனை வரும் போதெல்லாம் சூர்யா குரல் கொடுப்பது ஏன் விரைவில் முழு கட்டுரை உங்கள் TNNEWS24-ல் வெளியிடப்படும்